»   »  கடற்கரையில் சிவாஜி சிலை!

கடற்கரையில் சிவாஜி சிலை!

Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை தயாராகி விட்டது. சென்னைமெரீனா கடற்கரையில் சிலை நிறுவப்படவுள்ள இடத்தில் பீடம் அமைக்கும் பணிகள்தொடங்கியுள்ளன.

சிம்மக்குரலோன், நடிகர் திலகம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சிவாஜிகணேசன் தமிழ்ன் திரையுலகின் இரு பெரும் சக்கரவர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர்.5 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசிடம் இடம்கோரி கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அரசும் இடம் தந்தது. ஆனால் மணிமண்டபம் கட்டும் பணியைத்தான் நடிகர் சங்கம்தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. இந் நிலையில் ஆட்சிக்கு வந்தமுதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசனுக்கு கடற்கரையில், சிலை வைக்கப்படும் எனஅறிவித்தார்.

இதையடுத்து சிவாஜி சிலை நிறுவும் பொறுப்பு சென்னை அருகே உள்ளஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சிற்பி கே.ஜி. ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. 8 அடிஉயரத்தில் சிவாஜியின் சிலையை சிற்பி ரவி வடித்து முடித்துள்ளார். வெண்கலத்தில்படு கம்பீரமாக சிலை உருவாகியுள்ளது.

5 பேர் கொண்ட குழு கடந்த 40 நாட்களில் இந்த சிலையை வடித்துள்ளனர். சிலையின்மொத்த எடை 750 கிலோ ஆகும்.

இந்த சிலையை சிற்பக் கூடத்துக்குச் சென்று முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.

இப்போது சிலையை மெருகேற்றும் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.ஜூலை 1ம் தேதி சிலையை அரசிடம் ஒப்படைக்கவுள்ளனர். ஜூலை 21ம் தேதிசிவாஜியின் நினைவு நாள் வருகிறது. அன்றைய தினம் சிவாஜி சிலை மெரீனாகடற்கரையில் திறந்து வைக்கப்படும்.

மெரீனா கடற்கரையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் இடத்தில் இந்தசிலை நிறுவப்படவுள்ளது. அந்த இடத்தில் பீடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

சிவாஜி சிலை எப்படி உள்ளது என்று சிற்பி ரவி கூறுகிைல், கடந்த 30 வருடங்களாகசிலைகளை வடித்து வருகிறேன். அம்பேத்கர், காமராஜர், எம்.ஜி.ஆர். ராஜீவ்காந்திஆகியோரது சிலைகளை வடித்துள்ளேன். சிவாஜி சிலையை உருவாக்க 10 வகையானபடங்களைத் தயாரித்தோம்.

மேலும், தனக்கு சிலை அமைத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறிதனது மகன்களிடம் சிவாஜி ஒரு போஸ் கொடுத்து அதை புகைப்படமாக எடுத்துவைத்திருந்தார். அந்தப் படத்தை மாதிரியாகக் கொண்டுதான் தற்போது சிலையைவடிவமைத்துள்ளோம்.

இதேபோன்ற சிலையைத்தான் புதுவையிலும் உருவாக்கினோம் என்றார் ரவி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil