"நாகவல்லி படத்திற்கு தடை நீடிப்பு "சந்திரமுகியின் தெலுங்கு பதிப்பிற்கு தடையை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி ஆகியோர் நடித்து பிரியதர்ஷன் இயக்கிய "மணிச்சித்திரத்தாழ் என்றபடம் தான் ரஜினி நடித்த சந்திரமுகியின் ஒரிஜினலாகும். இந்தப்படத்திற்கு கதை எழுதியவர் மதுமுட்டம் என்பவர். இவரிடமிருந்து உரிமையை வாங்கித்தான் அப்பச்சன்மணிச்சித்திரத்தாழை எடுத்தார். இதை தமிழில் தயாரிக்க அப்பச்சனிடமிருந்து சிவாஜி பிலிம்ஸ் உரிமை வாங்கியது.இதையடுத்து தெலுங்கில் இந்தப் படத்தை தயாரிக்க லட்சுமி நரசிம்மா நிறுவனத்துக்கு சிவாஜி பிலிம்ஸ் உரிமை வழங்கியது. இதுஒரு புறமிருக்க மணிச்சித்திரத்தாழ் கதையை கன்னடத்தில் தயாரிக்க துவாரக சித்ராவுக்கு அப்பச்சன் ஏற்கனவே உரிமைவழங்கியிருந்தார்.அவரிடமிருந்து தெலுங்கு பட அதிபர் ஒருவர் உரிமை பெற்று "நாகவல்லி என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இந்தப் படம்விரைவில் வெளியாக உள்ளது. சந்திரமுகி தெலுங்கிலும் வெளியாகி இருப்பதால் "நாகவல்லியை ரிலீஸ் செய்யக்கூடாது என்றுஅப்பச்சன், சிவாஜி பிலிம்ஸ், லட்சுமி நரசிம்மா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி நாகவல்லியை வெளியிட தற்காலிக தடை விதித்தார். இந்த தடையை நீக்குமாறு நாகவல்லியின்தயாரிப்பாளர் மனு தாக்கல் செய்தார். நீதிபதி கண்ணதாசன் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கு முடியும் வரைநாகவல்லி படத்திற்கான தடையை நீடித்து உத்தரவிட்டார்.

By Staff

"சந்திரமுகியின் தெலுங்கு பதிப்பிற்கு தடையை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி ஆகியோர் நடித்து பிரியதர்ஷன் இயக்கிய "மணிச்சித்திரத்தாழ் என்றபடம் தான் ரஜினி நடித்த சந்திரமுகியின் ஒரிஜினலாகும்.

இந்தப்படத்திற்கு கதை எழுதியவர் மதுமுட்டம் என்பவர். இவரிடமிருந்து உரிமையை வாங்கித்தான் அப்பச்சன்மணிச்சித்திரத்தாழை எடுத்தார். இதை தமிழில் தயாரிக்க அப்பச்சனிடமிருந்து சிவாஜி பிலிம்ஸ் உரிமை வாங்கியது.

இதையடுத்து தெலுங்கில் இந்தப் படத்தை தயாரிக்க லட்சுமி நரசிம்மா நிறுவனத்துக்கு சிவாஜி பிலிம்ஸ் உரிமை வழங்கியது. இதுஒரு புறமிருக்க மணிச்சித்திரத்தாழ் கதையை கன்னடத்தில் தயாரிக்க துவாரக சித்ராவுக்கு அப்பச்சன் ஏற்கனவே உரிமைவழங்கியிருந்தார்.

அவரிடமிருந்து தெலுங்கு பட அதிபர் ஒருவர் உரிமை பெற்று "நாகவல்லி என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இந்தப் படம்விரைவில் வெளியாக உள்ளது. சந்திரமுகி தெலுங்கிலும் வெளியாகி இருப்பதால் "நாகவல்லியை ரிலீஸ் செய்யக்கூடாது என்றுஅப்பச்சன், சிவாஜி பிலிம்ஸ், லட்சுமி நரசிம்மா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நாகவல்லியை வெளியிட தற்காலிக தடை விதித்தார். இந்த தடையை நீக்குமாறு நாகவல்லியின்தயாரிப்பாளர் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி கண்ணதாசன் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கு முடியும் வரைநாகவல்லி படத்திற்கான தடையை நீடித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X