அப்படியே என் பெட்ரூமுக்கும் வந்துடு.. புகைப்படக்கலைஞரை விளாசிய கரீனா கபூர் கணவர்!

மும்பை: நடிகை கரினா கபூரின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகருமான சைஃப் அலி கான் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களை விளாசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் பிரபலங்கள் எங்கே சென்றாலும் புகைப்படக் கலைஞர்கள் அவர்களை கூடவே பின் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் இதனை ஜாலியாக அனுமதித்த பிரபலங்கள், ஒரு கட்டத்துக்கு மேல் பிரைவஸியில் தலையிடுவதை அறிந்து கொண்டு கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

மீடியா வெளிச்சம்

மீடியா வெளிச்சம்

பிரபலங்களுக்கு ஆரம்பத்தில் ரொம்பவே விருப்பமான ஒன்றாக மீடியா வெளிச்சம் உள்ளது. யாராவது ஒரு பத்திரிகை புகைப்படக் கலைஞராவது நம்மை போட்டோ எடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவிப்பார்கள். ஆனால், பிரபலமான பின்னர், மீடியாவின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் கடுப்படிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பாலிவுட்டில் சமீப காலமாக சில மீடியாக்கள் நடிகர்களின் பிரைவஸிகளில் தலையிட ஆரம்பித்துள்ள நிலையில், இதுபோன்ற பிரச்சனைகள் கிளம்பி வருகின்றன.

மலைகா அரோரா அம்மா பர்த்டே பார்ட்டி

மலைகா அரோரா அம்மா பர்த்டே பார்ட்டி


போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் காதலித்து வரும் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவின் அம்மா ஜாய்ஸ் அரோராவின் 70வது பிறந்தநாள் பார்ட்டி நேற்று இரவு மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட்டின் பல பிரபலங்கள் அதில் பங்கேற்றனர். கரீனா கபூர் மற்றும் அவரது கணவர் சைஃப் அலி கானும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினர்.

வீடு வரை பின் தொடர்ந்து

வீடு வரை பின் தொடர்ந்து

இரவு பர்த்டே பார்ட்டி முடிந்து சைஃப் அலி கானும் நடிகை கரீனா கபூரும் தங்களது வீட்டுக்கு செல்லும் வரை ஒரு புகைப்படக் கலைஞர் அவர்களை அப்படியே பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை வந்துள்ளார். அதனை அறிந்து கொண்ட சைஃப் அலி கான் சற்றே கடுப்பாகி பேசிய வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

அப்படியே பெட்ரூமுக்கு வந்துடு

அப்படியே பெட்ரூமுக்கு வந்துடு

சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூரை நிற்க சொல்லி ஒரே ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுங்க என சொல்ல, அத்துமீறி தனது வீடு வரை அந்த புகைப்படக் கலைஞர் வந்து விட்டார் என்கிற கடுப்பில், அப்படியே என் பெட்ரூமுக்கும் வந்துடு என சைஃப் அலி கான் கண்டித்து பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஆலியா பட் வீட்டுக்குள் ஜூம் போட்டு

ஆலியா பட் வீட்டுக்குள் ஜூம் போட்டு

சமீபத்தில் நடிகை ஆலியா பட் வீட்டுக்கு அருகே உள்ள குடியிருப்பில் நின்று கொண்டு சில புகைப்படக் கலைஞர்கள் அவர்து வீட்டுக்கே ஜூம் அடித்து போட்டோக்களை எடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கொஞ்சம் கூட அசிங்கமா இல்லை என்றும் எந்த உலகத்தில் இது சரி என்றும் கேள்வி எழுப்பி விளாசி இருந்தார். மேலும், அந்த புகைப்படக் கலைஞர்கள் மீது புகாரும் கொடுத்திருந்தார். இந்நிலையில், சைஃப் அலி கானும் கடுப்பாகி கத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராவணனாக

ராவணனாக


நடிகர் சைஃப் அலி கான் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இஸ்லாமியரான சைஃப் அலி கான் எப்படி ராவணனாக நடிக்கலாம் என பெரும் சர்ச்சையே கிளம்பியது. மேலும், ஆதிபுருஷ் டீசரில் அவரது கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அதனை பயங்கரமாக ட்ரோல் செய்தனர். சைஃப் அலி கான் பத்து தலை காட்சியை வைத்து பல நடிகர்களின் முகங்களை மார்ஃபிங் செய்தும் ட்ரோல்கள் பறந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X