twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்த உலகத்திலேயே சிறந்த வில்லன் அவர்தான்..' ஸ்பீல்பெர்க் புகழ்ந்த ரஜினி பட வில்லன் இவர்தான்!

    By
    |

    சென்னை: இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த வில்லன் இவர்தான் என்று ரஜினி பட வில்லனை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் புகழ்ந்துள்ளார்.

    Recommended Video

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா? இசையமைப்பாளர் அம்ரிஷ்!-வீடியோ

    பல இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டிலும் தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள். அதில் முதன்முதலாக ஹாலிவுட் படத்தில் நடித்த இந்தி நடிகர் அம்ரிஷ் புரி.

    இந்தியில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், தமிழில் ரஜினியின் தளபதி, பாபா படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

    போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது.. பாலியல் குற்றங்களால் பிரபல பாடகி வேதனை!போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது.. பாலியல் குற்றங்களால் பிரபல பாடகி வேதனை!

    இண்டியானா ஜோன்ஸ்

    இண்டியானா ஜோன்ஸ்

    ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆஃப் டூம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், இவர். ஆனால், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. ஸ்பீல்பெர்க்கின் டெம்பிள் ஆப் டூம் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்த அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதன் ஷூட்டிங்கை இலங்கை, மக்காவ், லண்டனில் நடத்தினர்.

    சரியாக இருக்கும்

    சரியாக இருக்கும்

    இந்நிலையில், இந்தப் படத்துக்காக அம்ரிஷ் புரியை, ஆடிஷன் செய்ய அமெரிக்க காஸ்டிங் இயக்குனர்கள் இந்தியா வந்தனர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் அவர். அதற்குப் பதிலாக, தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் வந்து, தனது நடிப்பை கவனிக்குமாறு கர்வமாகச் சொன்னார் அவர். அதுதான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    எப்படி தெரியும்?

    எப்படி தெரியும்?

    அதோடு 'என்னை நடிகராக ஸ்பீல்பெர்க் அறிவார். நான் எந்த மொழி பேசுகிறேன் என்பது அவருக்கு எப்படி தெரியும்?' என்று அவர்கள் கொடுத்த ஆங்கில வசனத்தையும் வாசிக்க மறுத்துவிட்டார். பின்னர் ஒரு வழியாக அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் அம்ரிஷ் புரி. அந்த செட்டில் இந்தியனாக இருந்ததால், ஈகோ உட்பட தான் எந்த பிரச்னையையும் சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார் அம்ரிஷ் புரி.

    த ஆக்ட் ஆப் லைப்

    த ஆக்ட் ஆப் லைப்

    அந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் துல்லியம் தெரிந்தது. எதையாவது சும்மா செய்துவிட்டு சென்றுவிட முடியாது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஸ்பீல்பெர்க் படத்தில் நடித்த பெருமை கிடைத்தது என்று தனது சுயசரிதையான த ஆக்ட் ஆப் லைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார், மறைந்த அம்ரிஷ் புரி. ஆனால், ஸ்பீல்பெர்க், 'அம்ரிஷ், எனக்கு மிகவும் பிடித்த வில்லன். உலகம் இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த வில்லன் அவர்தான்' என்று தெரிவித்திருந்தார், பின்னர்.

    English summary
    director Steven Spielberg, called Amrish Puri, ‘best villain world has ever produced’
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X