இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கை பிட்டு பிட்டாக எடுத்து வருகின்றனர்.

இன்னமும் கிராண்ட் ஃபினாலேவின் டைட்டில் வின்னர் ஷூட்டிங் நிறைவு பெறவில்லையாம்.

ஒரு வேளை ஆரிக்கு பதிலாக டைட்டிலை பாலா அல்லது ரியோவுக்கு கொடுக்க விஜய் டிவி திட்டம் போடுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆரி தான் வின்னர்

ஆரி தான் வின்னர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தான் என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும், பல தரப்பட்ட கருத்துக் கணிப்புகளும் தெரிவித்து விட்டன. ஆனால், விஜய் டிவி கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கை இன்னமும் முடிக்காமல் இருப்பது சின்ன சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

கோல்மால் நடக்குமா

கோல்மால் நடக்குமா

ஒட்டுமொத்த குரலாய் ஆரிக்குத் தான் பிக் பாஸ் டைட்டில் என ஒலித்துக் கொண்டிருக்கையில், இன்று மாலை 3 மணிக்கு மேல் தான் டைட்டில் வின்னர் அறிவிப்புக்கான ஷூட்டிங்கை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால், கடைசி நேரத்தில் ஏதாவது கோல்மால் நடக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

நம்பிக்கை போய்விடும்

நம்பிக்கை போய்விடும்

ஆரிக்கு பதிலாக பிக் பாஸ் டைட்டிலை ரியோவுக்கோ அல்லது பாலாவுக்கோ கொடுத்தால் நிச்சயம் நிகழ்ச்சியின் மீதுள்ள நம்பிக்கை மக்களிடத்தில் போய்விடும் என்றும் சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், அதையெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பொருட்படுத்துவார்களா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி தான்.

கமல் சொன்ன விஷயம்

கமல் சொன்ன விஷயம்

கடந்த சீசனில் கூடத் தான் டைட்டில் வின்னர் அறிவிப்பின் போது, முகேன் ராவுக்கு டைட்டில் கொடுத்ததற்கு எதிராக பலரும் பொங்கி எழுந்தனர். கம்ப்யூட்டர் டிவியெல்லாம் போட்டு உடைத்தார்கள் என நேற்றைய ஷோவில் கமல் சொன்ன விஷயமும் இதற்கான லீடாக இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

மறைக்கப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்

மறைக்கப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்

முன்னதாக சமூக வலைதளங்களில் சனம் ஷெட்டிக்கு எதிராக பாலாஜி முருகதாஸ் பயன்படுத்திய அட்ஜெஸ்ட்மென்ட் என்கிற வார்த்தை இடம்பெற்ற புரமோவையே மூடி மறைத்து விட்டனர். அதைப் பற்றி கமல்ஹாசன் எதுவுமே பேசவில்லை. சனம் ஷெட்டிக்கு அந்த கோபம் இருந்ததால் தான் மீண்டும் வந்த போது பாலாவிடம் அப்படி பேசினார் என்றும் கூறி வருகின்றனர்.

மக்கள் தீர்ப்பாக இருக்குமா

மக்கள் தீர்ப்பாக இருக்குமா

உலக நாயகன் கமல்ஹாசன் சொன்னது போலவே இந்த பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் டைட்டில் வின்னர் ஆரி தான் என அறிவிக்கப்படுவாரா? மக்கள் தீர்ப்பாக இன்றைய ஷோ நடக்குமா? அல்லது இறுதி நேரத்தில் பாலா அல்லது ரியோவுக்கு டைட்டில் செல்ல வாய்ப்பிருக்கா என ஏகப்பட்ட இறுதி நேர ஆச்சர்யங்களுடன் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ரசிகர்களை பதட்ட மனநிலையில் வைத்துள்ளது. வெயிட் பண்ணி பார்ப்போம்.

ரகசியம் காக்க

ரகசியம் காக்க

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட் சனிக்கிழமையே நடத்தப்படுவதால், உள்ளே இருக்கும் சில கருப்பு ஆடுகள் தகவல்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டு, ரசிகர்களுக்கு நிகழ்ச்சியை பார்க்க பிடிக்காமல் போரடிக்க செய்வதால், கிராண்ட் ஃபினாலேவின் இறுதி தருணங்களின் ரகசியத்தை காக்கவும் இப்படி செய்யலாம் என்கிற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X