twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் வீட்டில் கல்வீச்சு..பிடிபட்ட 4 பேர் சொன்ன பேய்க்கதை..வயிறு வலிக்க சிரித்த போலீஸார்

    |

    நடிகர் விஷால் வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன் காரில் வந்த மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது.

    கார் நம்பரை வைத்து போலீஸார் பிடித்ததில் தாங்கள் ஏன் கல்வீசினோம் என நம்ப முடியாத கதையை சொல்லி போலீஸாரை சிரிக்க வைத்துள்ளனர்.

    குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்த நிலையில் சிசிடிவி கேமராவில் சிக்கிய கார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி 4 பேரை பிடித்துள்ளனர்.

    மணி சார் என் மேல நம்பிக்கை வெச்சதற்கு நன்றி.. குயிலாக கூவிய குயிலி! மணி சார் என் மேல நம்பிக்கை வெச்சதற்கு நன்றி.. குயிலாக கூவிய குயிலி!

    விஷாலுக்கு எதிரிகள் உண்டா?

    விஷாலுக்கு எதிரிகள் உண்டா?

    நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் நடிகர் விஷாலின் தந்தை மிகப்பெரிய தயாரிப்பாளர். விஷால் முதன் முதலாக தமிழில் செல்லமே படம் மூலமாக 2004 ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்தடுத்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி-2 என தொடர்ந்து நடித்து வருகிறார். படத்தயாரிப்பு விவகாரங்களில் விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ளது. அவரது அலுவலகத்தில் வேலைப்பார்த்த ஒருவர் பணம் கையாடல் சம்பந்தமாக புகார் உள்ளது. சினிமாவில் நடக்கும் சின்ன சின்ன மோதல்கள், வெளியில் பரபரப்பாக தெரியாவிட்டாலும் திரையுலகில் இன்னார் இன்னார் நெருக்கம், இவருக்கு இவரை ஆகாது என இளம் நடிகர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் வெளிப்படை.

    விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்.. கல்வீச்சு

    விஷால் வீட்டுக்கு வந்த மர்ம கார்.. கல்வீச்சு

    விஷால் வீடு அண்ணாநகர் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு விஷால் வீட்டருகில் காரில் வந்த சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர். இது குறித்து விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் மறுநாள் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர்.

    ஷிப்ட் கார் நம்பரை வைத்து பிடித்த போலீஸார்

    ஷிப்ட் கார் நம்பரை வைத்து பிடித்த போலீஸார்

    விஷால் வீட்டுக்கு வந்த மர்ம ஷிப்ட் கார் யாருடையது என போலீஸார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் யாரென்பது குறித்து விசாரித்து வந்த நிலையில் காரின் நம்பரை வைத்து நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரை சேர்ந்த பிரவீன்குமார்(29), ராஜேஷ்(29), ஓட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன்(29), கட்டுமான பொறியாளரான மணிரத்தினம்(28), ஆகிய நான்கு பேர் என தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு காரில் வந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் அந்த தகராறு காரணமாக கற்களை வீசி தாக்கி கொண்டதில் தவறுதலாக ஒரு கல் நடிகர் விஷாலின் வீட்டின் மீது பட்டதாக தெரிவித்தனர்.

    சூப்பர் பேய்க்கதை சொன்ன ஆசாமிகள்

    சூப்பர் பேய்க்கதை சொன்ன ஆசாமிகள்

    எனவே இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் உண்மை தன்மையை அறியும் வகையில் நான்கு பேரையும் தனித்தனியாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கல்லை வீசியதில் கண்ணாடி உடைந்ததா? அல்லது விஷாலின் வீட்டை கல் வீசி தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல் வீசினார்களா? தங்களுக்குள் சண்டை போடுபவர்கள், காரை நிறுத்தி இறங்கி கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் அதே காரில் ஏறி ஒன்றாக செல்வார்களா? நம்பும்படியாக கதை சொல்லுங்கப்பா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    English summary
    Actor Vishal's house was attacked by a mysterious gang in a car four days ago. They made the police laugh by telling the unbelievable story of why they pelted stones when they were caught by the police on the basis of the car number. While the police were searching for the criminals, the police conducted an investigation into the car caught on the CCTV camera and caught 4 people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X