twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்காக உச்சி வெயிலில் ஜட்டியோடு நின்றேன்: சிம்ஹா உருக்கம்

    By Veera Kumar
    |

    சென்னை: ஜிகர்தண்டா பட வாய்ப்புக்காக ஜட்டியோடு வெயிலில் பல வாரங்கள் நின்றுள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்ஹா.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், லட்சுமிமேனன் நடித்து வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இதில் சேது என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹாவின் நடிப்பு திறன் வெகுவாக பேசப்பட்டது.

    படத்தின் கதாநாயகனே அவர்தான் என்கிற அளவுக்கு சிம்ஹாவுக்கு பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். நேரம், சூதுகவ்வும் படங்களில் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா சிம்ஹாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

    ஆனால், இந்த இனிமையான வார்த்தைகளை கேட்பதற்கு, சிம்ஹா கடந்து வந்த பாதைகள் மிகவும் கரடு முரடானவை. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

    கொடைக்கானலில் வளர்ந்தேன்

    கொடைக்கானலில் வளர்ந்தேன்

    எனது குடும்பம் ஹைதராபாத்தில் இருந்து வந்தாலும், நான் வளர்ந்தது எல்லாம் கொடைக்கானலில்தான். அதைத்தான் எனது தாய் வீடாக பார்க்கிறேன். பள்ளி படிப்பை கொடைக்கானலில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை கோவையில் தொடர்ந்தேன். படிப்பில் எனக்கு ஆர்வம் கிடையாது.

    டிவி நிகழ்ச்சியில் நடிப்பு திறன்

    டிவி நிகழ்ச்சியில் நடிப்பு திறன்

    2005ல் கோவையில் நடந்த நாளைய நட்சத்திரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி போட்டிவரை சென்றேன். இறுதி போட்டியில் சுந்தர் சி மற்றும் இ.ராமதாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். எனது நடிப்பை ராமதாஸ் வெகுவாக பாராட்டினார். சென்னைக்கு வந்து சினிமாவில் உன் அதிருஷ்டத்தை சோதித்து பார் என்று ராமதாஸ் என்னிடம் கூறினார்.

    நடிக்க சான்ச் தர ரூ.5000

    நடிக்க சான்ச் தர ரூ.5000

    இதன்பிறகு எனக்கு நடிப்பில் தூண்டுதல் அதிகரித்தது. ஆனால் படத்தில் நடிக்க நான் எடுத்த முதல் முயற்சியே கசப்பானதுதான். சிலர் டிவி சீரியலில் என்னை நடிக்க வைப்பதாக கூறி, கோவையில் இருந்து சென்னை அழைத்து வந்தனர். முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை வாங்கிக் கொண்டனர்.

    ஏமாற்றிவிட்டார்கள்

    ஏமாற்றிவிட்டார்கள்

    சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் எங்காவது போய், ரெடியாகிவிட்டு நேரடியாக ஸ்டூடியோவுக்கு வந்து விடு என்று கூறிவிட்டு அவர்கள் தனியாக கிளம்பி சென்றுவிட்டனர். நான் குறிப்பிட்ட ஸ்டூடியோவுக்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர்கள் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இரவு முழுக்க விடாமல் போன் செய்து பார்த்தேன். மறுநாள் காலையில்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

    கோவை திரும்பி படித்து முடித்தேன்

    கோவை திரும்பி படித்து முடித்தேன்

    அதிருஷ்டவசமாக ராமதாஸ் செல்போன் நம்பர் எண்ணிடம் இருந்தது. அவரிடம் விஷயத்தை கூறினேன். தனது வீட்டுக்கு வருமாறு என்னை அழைத்த ராமதாஸ், காலை சிற்றுண்டி கொடுத்ததுடன், கையில் 100 ரூபாயும் கொடுத்து கோவைக்கு திரும்பி, படிப்பை முடித்துவிட்டு வருமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அவர் சொன்னபடியே படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

    சுட்டெரிக்கும் வெயிலில் நின்றேன்

    சுட்டெரிக்கும் வெயிலில் நின்றேன்

    ஜிகர்தண்டா படத்தின், சேது கதாப்பாத்திரத்துக்கு என்று சில தோற்றம், குணநலன்களை இயக்குநர் கார்த்திக் திட்டமிட்டு வைத்திருந்தார். மேக் அப் மூலமாக கதாபாத்திரத்தை மாற்ற அவர் விரும்பவில்லை. எனவே எனது தோற்றத்தை மாற்றுவதற்காக ஜட்டியோடு, பல வாரங்களாக நான் நண்பகல் வெயிலில் நின்றுள்ளேன்.

    மாஜி ரவுடிகளுடன் பழக்கம்

    மாஜி ரவுடிகளுடன் பழக்கம்

    மதுரையில் இரு மாதங்கள் தங்கியிருந்து, ரவுடிகளாக இருந்து மனம் திருந்தி வாழுவோரிடம் சென்று பழகி, அந்த கதாப்பாத்திரங்களை உள்வாங்கினேன். இவ்வாறு சிம்ஹா தெரிவித்துள்ளார். இதில் ஒரு எதிர்பாராத நிகழ்வு என்னவென்றால் சென்னைக்கு வந்து சிம்ஹா ஏமாந்த ஜூன் 12ம் தேதிதான் ஜிகர்தண்டா திரைப்படத்தில் அவர் நடிக்கவும் ஆரம்பித்தாராம்.

    English summary
    Actor Simhaa, whose role in Jigarthanda has been critically acclaimed, says he is keen on taking up films that will feed the actor in him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X