twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்மை இணைக்க ஒரு மொழி தேவை.. கமலுக்கு பதில் சொன்ன பிக்பாஸ் காயத்திரி.. பதிலடி தந்த நெட்டிசன்ஸ்!

    நடிகர் கமல்ஹாசன் இந்தி திணிப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு தற்போது நடிகை காயத்திரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    Kamal Hassan Speech about Hindi Imposition

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தி திணிப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு தற்போது நடிகை பிக்பாஸ் காயத்திரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.

    இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. கமல் தனது வீடியோவில் 1950-ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது, மொழி உரிமை குறித்த சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது.

    அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முடியாது. அவர்கள் அதற்கு கொஞ்சம் கூட முயற்சிக்கக் கூடாது. அப்படி நினைத்தால் புரட்சி வெடிக்கும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    கமலின் ஒரு வீடியோ.. கொந்தளித்து போன வடஇந்தியர்கள்.. கொண்டாடும் தென்இந்தியா.. மொழிப்போர்!கமலின் ஒரு வீடியோ.. கொந்தளித்து போன வடஇந்தியர்கள்.. கொண்டாடும் தென்இந்தியா.. மொழிப்போர்!

    கோபம்

    கோபம்

    மேலும், இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது வேறு மாதிரி இருக்கும். அதன் அழுத்தம் வேறு மாதிரி இருக்கும், என்றுள்ளார்.

    என்ன கேள்வி

    இந்த நிலையில் கமலின் ''இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம்.'' என்ற கருத்துக்கு காயத்திரி ரகுராம் பதில் அளித்துள்ளார். அதில், நாம் விருந்து சாப்பிட வாழை இலை தேவை. நம்மை ஒன்றாக இணைக்க, ஒரு மொழி தேவை, நம்மை அதுதான் தொடர்பு கொள்ள வைக்கும், என்று காயத்திரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

    வேறு என்ன அர்த்தம்

    மேலும், இதற்கு அர்த்தம் நாம் நம்முடைய தாய் மொழியை விட்டு செல்ல வேண்டும் என்பது அல்ல. கற்றுக்கொள்வது என்பது திறமை மற்றும் நன்மை பயக்கும், என்றும் காயத்திரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

    வைரல்

    வைரல்

    இந்த நிலையில் எப்போதும் போல காயத்திரி ரகுராமுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பலரும் நீங்கள் ஏன் இந்தியை ஆதரிக்கிறீர்கள் என்று கடுமையாக அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். நீங்கள் இந்திக்கு ஆதரவாக, தமிழுக்கு எதிராக பேசுவீர்கள் என்று கண்டிப்பாக தெரியும், என்றுள்ளனர்.

    தமிழ் எப்படி

    இவர் ''எப்போதும் தமிழ்தான்'' என்று பதில் அளித்துள்ளார்.

    English summary
    Stop Hindi Imposition: Gayathiri Raguramm replies to Kamal Haasan video on Hindi, but gets backfire.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X