twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலின் ஒரு வீடியோ.. கொந்தளித்து போன வடஇந்தியர்கள்.. கொண்டாடும் தென்இந்தியா.. மொழிப்போர்!

    |

    Recommended Video

    Kamal Hassan Speech about Hindi Imposition

    டெல்லி: இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி டிரெண்ட் அடித்துள்ளது.

    இந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயன்று வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஹிந்திதான், நாட்டு மக்களை இணைக்கும், மொழி" என்று கருத்து தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து மக்கள் இடையே கடுமையான கோபத்தை வரவழைத்து இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தி திணிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

     எப்படி நடக்கிறது

    எப்படி நடக்கிறது

    கமல் தனது வீடியோவில், இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக, என்று கமல் கூறியுள்ளார்.

    போராட்டம் எழும்

    போராட்டம் எழும்

    1950-ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது, மொழி உரிமை குறித்த சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முடியாது. அவர்கள் அதற்கு கொஞ்சம் கூட முயற்சிக்கக் கூடாது. அப்படி நினைத்தால் புரட்சி வெடிக்கும்.

    எப்படி போராட்டம்

    எப்படி போராட்டம்

    ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது வேறு மாதிரி இருக்கும். அதன் அழுத்தம் வேறு மாதிரி இருக்கும். அது பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது, அவசியம் இல்லாதது. அந்த நிலைமை உருவாக கூடாது.

    வங்காளி மொழி

    வங்காளி மொழி

    இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகளில் பாடுவதில்லை. நம் இந்திய தேசிய கீதத்தை வங்காளத்தில் சந்தோசமாக பாடுகிறோம். ஏனென்றால் அந்த தேசிய கீதம் எல்லாம் கலாச்சாரம் குறித்தும் பேசுகிறது. அதனால்தான் அது தேசிய கீதம்.

    தமிழ் மொழி

    வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்!, வாழ்க நற்றமிழர்!, வாழிய பாரத மணித்திரு நாடு! என்று கமல்ஹாசன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    வைரல்

    வைரல்

    அதன்படி கமல்ஹாசனின் வீடியோவை பார்த்து வடஇந்தியார்களும், இந்தி பேசும் மக்களும், இந்து மொழி வெறியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமல்ஹாசன் இப்படி பேச கூடாது. அவர் பாலிவுட் சினிமாவில் நடித்த நன்றியை மறந்துவிட்டார் என்று விரக்தியில் இணையத்தில் டிவிட் செய்து வருகிறார்கள். கமலின் வீடியோவிற்கு எதிராக கொதித்து போய் அவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அதே சமயம் தென்னிந்தியாவை சேர்ந்த மக்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் . முக்கியமாக கர்நாடகா, கேரளா மக்களும், இன்னொரு பக்கம் வங்கத்து மக்களும் கமலுக்கு ஆதரவாக டிவிட் செய்தும், டிரெண்ட் செய்தும் வருகிறார்கள்.

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    இந்தி எதிர்ப்பு குறித்து நடிகர் ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. இன்னும் முன்னணி நடிகர்கள் யாரும் இதில் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் முதல் ஆளாக ஆங்கிலத்தில் நச் என்று சொல்லி இருக்கும் கருத்து பெரிய வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Stop Hindi Imposition: MNM chief and Actor Kamal Haasan video sparks fire in Social Media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X