இந்தி திணிப்பு: பொட்டில் அடித்தது போன்று வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி

By Siva

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறி ட்விட்டரில் தென்னிந்தியர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

#StopHindiImposition என்கிற ஹேஷ்டேகுடன் தினமும் ட்வீட் செய்து கொண்டிருந்தார்கள்.

எல்.கே.ஜி.

எல்.கே.ஜி. படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. அதில் அவர், இந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல அதுவும் ஒரு மொழி மட்டுமே. இந்தியாவுக்கு என்று தேசிய மொழி என்ற ஒன்று கிடையாது. நான் இதை எல்லாம் தமிழில் சொன்னால் உனக்கு புரியுமா?. மண்டைய மண்டைய ஆட்டுற, என்னை மட்டும் இந்தியில் கேள்வி கேட்கிற என்று தான் பேசிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர். ஜே. பாலாஜி. தமிழகம் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு

வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி ஏதாவது ட்வீட் செய்தாலோ, பேசினாலோ ஆர்வக் கோளாறு, ஓட்ட வாய், ஓவராக பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள். ஆனால் இந்தி நம் தேசிய மொழி கிடையாது. ஒரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் போட்டுள்ள ட்வீட்டை பார்த்து பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

தமிழ்

இந்தி திணிப்பு பற்றி ஆர்.ஜே. பாலாஜி போட்ட ட்வீட்டை பார்த்த பலரும் நாங்கள் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நன்றி பாலாஜி என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழுக்கு வெளிநாடுகளிலும் இருக்கும் அந்தஸ்தை ஆதாரத்துடன் ட்வீட் செய்துள்ளனர் சில தமிழர்கள். தமிழ் இந்தியா தவிர சிங்கப்பூர், இலங்கையிலும் அதிகாரப்பூர்வ மொழி என்று பெருமையாக தெரிவித்துள்ளனர்.

கிண்டல்

இந்தி திணிப்பை எதிர்த்து காட்டமாகவும், கேலியாகவும் தமிழர்கள் ட்வீட் செய்கிறார்கள். தமிழ் படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளையே தமிழ் பேச வைத்தவர்கள் நாங்கள். எங்க கிட்டயே வந்து இந்தியை திணிக்க பார்த்தால் நடக்குமா?. தமிழகத்தில் பானி பூரி விற்கும் வடஇந்தியர்களை முதலில் தமிழ் கற்குமாறு கூறுங்கள் என்று கலாய்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X