நான் என்ன செய்ய வேண்டும்னு நீங்கள் எனக்கு சொல்லிதராதீங்க.. நெட்டிசன்களை வெளுத்துவாங்கிய சமீரா ஷெரீப்
சென்னை : பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான சமீரா ஷெரீஃப் நெகட்டிவாக கமெண்ட் அனுப்பிய நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன எப்படி பார்த்துக்கனும், நான் என்ன பண்ணணும்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது உங்க வேலையை நீங்க பாருங்க என்று மிகவும் கோபத்துடன் கூறியுள்ளார்.
சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் பரபரப்பாக இந்த விஷயம் பரவி வருகிறது.

காதல் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீஃப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தடுப்பூசி
இந்நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாக சமூகவலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருந்தனர். இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் சமீரா ஷெரீஃப் கொரோனா தடுப்பூசியான முதல் டோஸை செலுத்திக் கொண்ட வீடியோவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருந்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு லேசான ஜுரம் மட்டுமே இருந்ததாக கூறி இருந்தார்.
ஏன் இப்படி ஆடுகிறாங்க
மேலும், குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு வாயா வாயா என்ற பாடலுக்கு ஆட்டம் ஆடி ஒரு வீடியோவை அப்லோடு செய்திருந்தார் சமீரா. இந்த வீடியோவை பார்த்து கொதித்துப்போன நெட்டிசன்ஸ், வயித்துல குழந்தை இருக்கு அதுவும் இல்லாம இப்போத்தான் தடுப்பூசி போட்டீங்க ஏன் இப்படி ஆடுகிறாங்க குழந்தைக்கு எதாவது ஆகப்போகுதுனு ஏராளமான நெகட்டிவ் கருத்துக்களை பலர் பதிவிட்டு இருந்தாங்க.

அவசியம் இல்லை
நான் பிரக்னன்ட்டாக இருக்கிறது எனக்கு தெரியும், என் குழந்தையை எப்படி பார்த்துக்குனும்னு எனக்கு தெரியும், என் குழந்தை மேல உங்களை விட எனக்கு அக்கறை இருக்கு, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மிகுந்த கோபத்துடன் சமீரா ஷெரீஃப் நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











