twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி திணிப்பு: ஒரேயொரு ட்வீட் போட்டு ஏ.ஆர். ரஹ்மான் நெத்தியடி

    By Siva
    |

    Recommended Video

    AR Rahman: இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் பலரும் குரல்- வீடியோ

    சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ட்வீட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

    மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியை திணிக்கக் கூடாது என்று கூறி ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    தமிழக அரசியல் தலைவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நேரத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    2 நாளில் இத்தனை கோடி வசூலா?: கடவுள் இருக்கான் நந்த கோபாலன் குமாரு #NGK 2 நாளில் இத்தனை கோடி வசூலா?: கடவுள் இருக்கான் நந்த கோபாலன் குமாரு #NGK

    ஏ.ஆர். ரஹ்மான்

    பரத் பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான மரியான் படத்தில் வந்த இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன என்கிற ஹிட் பாடலை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்தீப் ஜோகி பாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ஜோகியின் வீடியோவை வெளியிட்டு பஞ்சாப் மாநிலத்தில் தமிழ் பரவுவதாக தெரிவித்துள்ளார் அவர்.

    தமிழர்கள்

    இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் ட்விட்டரில் குரல் கொடுத்து வரும் வேளையில் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று ட்வீட் போட்டு நெத்தியடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த தமிழர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சார், நீங்க லெஜன்ட் என்பதை இந்த ஊமக்குத்து ட்வீட் மூலம் நிரூபித்துவிட்டீர்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    வேற லெவல்

    வேற லெவல்

    கத்தாமல், கதறாமல் தன்னுடைய பாடலை ஒரு இந்திகாரர் பாடிய வீடியோவை போட்டு இந்தி திணிப்புக்கான தனது எதிர்ப்பை அழகாக பதிவு செய்துவிட்டார் ஏ.ஆர். ரஹ்மான். முன்னதாக வாக்களிக்குமாறு மக்களை அறிவுறுத்தச் சொன்ன பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதே போன்று தான் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற விஷயங்களில் ரஹ்மான் வேற லெவல்.

    இந்தி

    இந்தி

    ஒரு புறம் ரஹ்மான் இப்படி ட்வீட் போட்டு இந்தி திணிப்புக்கு நெத்தியடி கொடுக்க மறுபுறமோ நெட்டிசன்கள் வேறு மாதிரி கூறுகிறார்கள். தமிழ் மட்டுமே தெரிந்து வைத்துள்ள நிலையில் முக்கிய நாளில் நேசமணியை டிரெண்டு செய்ய வைத்து கதற விட்டோம். இந்நிலையில் இந்தியையும் கற்றுக் கொண்டால் கதறல்ஸ் ஜாஸ்தியாகிவிடும் பரவாயில்லையா என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

    English summary
    AR Rahman has once again proved that when it comes to troll he is the boss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X