இமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா?

இமைக்கா நொடிகள் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

இமைக்கா நொடிகள் படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது...ஏன் தெரியுமா?- வீடியோ

சென்னை: நயன்தாரா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தை டிமாண்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ராஷி கன்னா, தேவன், ரமேஷ் திலக், பேபி மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா, அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இவர்களது குழந்தையாக பேபி மானசி நடித்துள்ளார்.

இது தான் கதை:

இது தான் கதை:

பெங்களூருவில் வசிக்கும் சிபிஜ அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்யனுக்கு சவால் விட்டு, பெங்களூரு நகரத்தையே நடுங்க வைக்கும் தொடர் கொலைகளை செய்கிறார் ருத்ரா (அனுராக் காஷ்யப்). சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவன் அர்ஜூன் (அதர்வா) இந்த கொலைகளால் பாதிக்கப்படுகிறார்.

வாழ்வா? சாவா?

வாழ்வா? சாவா?

வாழ்வா சாவா என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும் அர்ஜூனை, அஞ்சலி எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

சிறப்புத் தோற்றம்:

சிறப்புத் தோற்றம்:

இந்த படத்தில் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் விஜய் சேதுபதி, மனைவியை மிகவும் நேசிக்கும் கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. விஜய் சேதுபதிக்கு பின்னர் தனியாளாக நயன்தாரா அந்த குழந்தையை வளர்க்கிறார்.

ராஷி கன்னா:

ராஷி கன்னா:

நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடித்துள்ளார். அவரது காதலியாக டோலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் ராஷி கன்னா நடித்துள்ளார். காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார்.

அதே டயலாக் :

அதே டயலாக் :

முன்னதாக விஜய்சேதுபதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடித்த நானும் ரவுடி தான் படத்தில், அடிக்கடி நயனைப் பார்த்து விஜய்சேதுபதி, ‘ஆர் யூ ஓகே பேபி?' எனக் கேட்டுக் கொண்டே இருப்பார். ரசிகர்களிடம் இந்த டயலாக் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இப்படத்திலும் அதேபோன்று, நயனைப் பார்த்து விஜய்சேதுபதி, ‘ஆர் யூ ஓகே பேபி?' எனக் கேட்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X