சிம்புவை விட அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோன்... முக்கியமா ‘அந்த’ கண்டிஷன்... அலறிய STR48 டீம்

சென்னை: சிம்புவின் STR 48 படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

STR 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

ஆனால், சிம்புவை விட அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோன் சில கண்டிஷன்களையும் போட்டு STR 48 படக்குழுவையே மிரள வைத்துள்ளார்.

 STR 48: Deepika Padukone asked for a salary of RS.30 crore to act with Simbu in STR 48

சிம்புவை விட அதிக சம்பளம் கேட்ட தீபிகா:சிம்பு கடைசியாக நடித்த பத்து தல திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. பத்து தல வெளியாகும் முன்னரே அவரது STR 48 படம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துவிட்டது. அதன்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்தப் படம் பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனே நடிக்கலாம் என சொல்லப்பட்டது. இதற்காக STR 48 படக்குழு தீபிகாவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியதாம். ஆனால், தீபிகா படுகோனே கேட்ட சம்பளத்தை கேட்டு படக்குழுவுக்கு தலையே சுற்றிவிட்டதாம். அதுமட்டும் இல்லாமல் அவர் போட்ட கண்டிஷன் ஒவ்வொன்றும் STR 48 டீமுக்கு செம்ம ஷாக்கிங் கொடுத்துள்ளதாம்.

30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டுமே STR 48 படத்தில் கமிட் ஆவேன் எனக் கூறியுள்ளார் தீபிகா. இது சிம்புவின் சம்பளத்தை விடவும் அதிகம் என்பது அம்மணிக்கு தெரியாது போல. STR 48 படத்தின் ஹீரோ சிம்புவுக்கே 25 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் என கமல் கறாராக சொல்லிவிட்டாராம். ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் படம் பண்ணாலே போதும் என சிம்புவும் சம்பளம் குறித்து பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லையாம்.

 STR 48: Deepika Padukone asked for a salary of RS.30 crore to act with Simbu in STR 48

இந்நிலையில், 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட தீபிகா அடுத்தடுத்து மேலும் இரண்டு கண்டிஷன்களையும் போட்டு STR 48 படக்குழுவையே அலற வைத்துள்ளார். அதாவது 5 ஸ்டார் ஹோட்டலில் மட்டுமே ரூம் போட வேண்டும் என கூறியுள்ளார். அதோடு நிறுத்திவிடாமல் அவர் தங்கியிருக்கும் Floor-ன் அனைத்து ரூம்களையும் புக் செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார். இதனால், இந்த வம்பே வேண்டாம் என தெறித்து ஓடிவிட்டதாம் STR 48 படக்குழு.

இதனையடுத்து இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சிம்பு - கீர்த்தி சுரேஷ் ஜோடி இதுவரை இணைந்து நடித்தது இல்லை என்பதால், ரசிகர்களுக்கு இந்த காம்போ சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என படக்குழு நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், STR 48 படத்திற்காக தாய்லாந்தை தொடர்ந்து லண்டன் சென்றுள்ளார் சிம்பு. அங்கும் சில தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டு வந்த பின்னர் STR 48 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X