STR 48: “STR 48ல் பான் இந்தியா ஸ்டார்ஸ்..? கமல் போட்ட கண்டிஷன்..” தேசிங் பெரியசாமி ஷாக்!!
சென்னை: சிம்பு - இயக்குநர் தேசிங் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் STR 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை என தேசிங் பெரியசாமி கூறியிருந்தார்.
அதேபோல், STR 48 படத்தின் கதையை கமல் சாரிடம் தனியாக சொன்னதாகவும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பற்றியும் தேசிங் பெரியசாமி மனம் திறந்துள்ளார். முக்கியமாக STR 48 படத்தில் பான் இந்தியா ஸ்டார்ஸ் நடிப்பது பற்றி கமல் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

STR 48 படத்துக்கு கமல் போட்ட கண்டிஷன்
சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தற்போதைக்கு STR 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளதாம். ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் தான், ஷூட்டிங் தாமதமானதாக இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.
STR 48 ஷூட்டிங் தாமதமாக சிம்பு காரணமில்லை என்றும், இந்தப் படம் முடியும் வரை அவர் வேறு எதிலும் கமிட்டாக மாட்டேன் என சொல்லிவிட்டதாகவும் தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார். அதேபோல், படத்தின் பெரும்பாலான பகுதிகள் செட் போட்டு எடுக்கவிருப்பதால், அதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொன்னபோது, அவர் ஒரு கண்டிஷன் போட்டதாகவும் கூறியுள்ளார்.
STR 48 கதையை கேட்ட கமல் சார், ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் பற்றிய விவரங்களையும் கேட்டார். தம்பி சிம்புவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்க வேண்டும் எனவும், அதனால் ஷூட்டிங் முன்பே பக்காவாக பிளான் செய்துகொள்ளவும் அட்வைஸ் செய்தாராம். முக்கியமாக பிஸினஸ்காக மற்ற மொழிகளில் இருந்து பான் இந்தியா நடிகர்களை இதில் கமிட் செய்ய வேண்டாம் என ஆர்டர் போட்டுள்ளாராம்.
கதைக்கு தேவையான வகையில் நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் மட்டும், மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனவும் கூறியுள்ளாராம். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என மற்ற மொழி சூப்பர் ஸ்டார்ஸ் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதேபோல், விஜய்யின் லியோவிலும் சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் என வெரைட்டியாக களம் இறக்கினார் லோகேஷ்.
இன்னொரு பக்கம் ரஜினியின் தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் என பெரிய காம்போ இணைகிறது. இப்படி பல மொழிகளைச் சேர்ந்த டாப் ஹீரோக்களை நடிக்க வைத்தால், அது இந்திய அளவில் பிஸினஸ் நடக்க வாய்ப்பாக அமையும் என சொல்லப்படுகிறது. அதனால், அதுபோன்ற சம்பவங்கள் STR 48ல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











