STR 48: ஷூட்டிங் தொடங்கும் முன்பே STR 48ல் பஞ்சாயத்து... சிம்புவுக்காக களமிறங்கிய கமல்!
சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது.
முதல் நாளில் நல்ல ஓப்பனிங் இருந்தும் அடுத்தடுத்த நாட்களில் நெகட்டிவான விமர்சனங்களால் வசூல் குறைந்தது.
இந்நிலையில், பத்து தல படத்தை படத்தை தொடர்ந்து ராஜ்கமல் தயாரிக்கும் STR 48-ல் நடிக்கவுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே பஞ்சாயத்துக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

STR 48 ஷூட்டிங் தொடங்கும் முன்பே பஞ்சாயத்து
மாநாடு வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. கடந்தாண்டு வெந்து தணிந்தது காடு, சில தினங்களுக்கு முன்னர் பத்து தல என வரிசையாக மாஸ் காட்டி வரும் சிம்பு, அடுத்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரபலம் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
தற்காலிகமாக STR 48 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தின் கதையை ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்தாராம் தேசிங் பெரியசாமி. ஆனால், ரஜினி க்ரீன் சிக்னல் கொடுக்காததால், அது தற்போது சிம்புவிற்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் டெக்னிக்கல் டீம், மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல், STR 48 படப்பிடிப்பும் இன்னும் தொடங்கவில்லை, எப்போது தொடங்கும் என்பது குறித்து அப்டேட் இல்லை. இதனிடையே STR 48 ஷூட்டிங் தொடங்கும் முன்பே இந்தப் படம் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. அதாவது வெந்து தணிந்தது காடு ரிலீஸாகும் போதே அதன் இரண்டாம் பாகம் குறித்து லீட் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் சிம்பு கேங்ஸ்டராக மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனால், வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில் சிம்புவுக்கு சொகுசு கார் பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அதேபோல், இயக்குநர் கெளதம் மேனனுக்கும் புல்லட் பைக்கை கிஃப்ட்டாக கொடுத்தார். வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகமும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் தான் உருவாகவிருந்தது. ஆனால், சிம்புவுக்கும் கெளதம் மேனனுக்கும் இடையே தற்போது ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

பத்து தல ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கூட, "கெளதம் நடிகராக பிஸியாகிவிட்டார், அதனால் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் உருவாகுமா என தெரியாது" என்று சிம்பு பேசியிருந்தார். இது, சிம்பு தனது பேனரில் இன்னொரு படத்தில் நடிப்பார் என காத்திருந்த ஐசரி கணேஷுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது. மேலும், சிம்பு STR 48 படத்தில் கமிட் ஆகிவிட்டதால் இன்னும் டென்ஷனாகிவிட்டாராம் ஐசரி கணேஷ்.
இதனால், இதுகுறித்து சிம்புவிடம் ஐசரி கணேஷ் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரச்சினை பெரிதாகிவிடக் கூடாது என கமலிடம் விசயத்தை கூறியுள்ளார் சிம்பு. இதனையடுத்து கமல்ஹாசனே ஐசரி கணேஷை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம். இதனால், தற்போது STR 48 படத்துக்கு பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. STR 48 ஷூட்டிங் தொடங்கும் முன்பே பஞ்சாயத்தா என திரையுலகம் பரபரப்பாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











