STR 48: “அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்..” STR 48-ல் சிம்புவுடன் இணையும் KGF பிரபலம்!

சென்னை: சிம்புவின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி STR 48-ஐ இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இயக்குநர் தேசிங் பெரியசாமி STR 48 பற்றிய அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.முக்கியமாக STR 48-ல் கேஜிஎஃப் படத்தின் பிரபலம் இணையவிருப்பதாக தேசிங் பெரியசாமி லீட் கொடுத்துள்ளார்.

STR 48: KGF fame Ravi Basrur is expected to be composing the music for Simbus STR 48

STR 48ல் இணையும் கேஜிஎஃப் பிரபலம்
பத்து தல வெற்றியைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் ஒரு படம் பண்ணவுள்ளார் சிம்பு. அவரது 48வது படமான இதனை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனன், ரக்‌ஷன் ஆகியோர் நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து தனது அடுத்தப் படத்தில் ரஜினியுடன் இணையவிருந்தார் தேசிங் பெரியசாமி.

ஆனால், சூப்பர் ஸ்டாரின் கால்ஷீட் கிடைக்காததால், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைகிறார். ரஜினிக்காக எழுதிய அதே கதையை சிம்புவுக்கு சொன்ன தேசிங் பெரியசாமி, அந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் இயக்கவுள்ளார். இறுதியாக சிம்பு, தேசிங் பெரியசாமி, ராஜ்கமல் பிலிம்ஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தாய்லாந்து, லண்டன் சென்ற சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார்.

இதனிடையே STR 48 பீரியட் ஜானரில் உருவாகவுள்ளதாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பீரியட் படமாக இருந்தாலும் தர லோக்கல் சம்பவங்கள் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்து இதுவரை அப்டேட் வெளியாகவில்லை.

ஆனால், சில தினங்களுக்கு முன்னர் STR 48 படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த செய்தி தீயாக பரவி வந்த நிலையில், ஏஆர் ரஹ்மான் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். முன்னதாக சிம்புவிற்காக தான் வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களுக்கு இசையமைத்தேன் என ஏஆர் ரஹ்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STR 48 படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பதால், அனிருத், சந்தோஷ் நாராயணன் அல்லது யுவன் இந்தப் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்திய தகவல்களின் படி, ரவி பஸ்ரூர் STR 48 படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் ரவி பஸ்ரூர். அவரிடம் தான் STR 48 படத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், இதுபற்றிய விரைவில் வெளியாகும் எனவும், இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார். கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தது ரவி பஸ்ரூரின் இசை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் STR 48ல் இணைய வேண்டும் என சிம்பு ரசிகர்கள் விரும்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X