STR 48: உலக நாயகனா இருந்தாலும் சிம்பு கிட்ட அது நடக்காது... இன்னும் தொடங்காத STR 48 ஷூட்டிங்
சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு செம்ம ஸ்லிம்மாக வந்து மாஸ் காட்டினார்.
STR 48 படத்திற்காக தாய்லாந்து சென்று தனது உடல் எடையை குறைத்து வந்தார் சிம்பு.
ஆனால், ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் STR 48 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது.

STR 48 ஷூட்டிங் அப்டேட்
மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் சிம்பு வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் கேங்ஸ்டராகவும் மிரட்டியிருந்தார். இதனிடையே சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 48வது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் STR 48 படத்தில் நடிக்கவுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்காக தயார் செய்யப்பட்ட கதையில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இப்போதே STR 48 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மாநாடு படத்துக்காக வெயிட்டை குறைத்த சிம்பு, பத்து தல ஏஜிஆர் கேரக்டருக்காக மீண்டும் எடையை அதிகரித்தார்.
ஆனால், பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக தாய்லாந்து சென்ற சிம்பு, மீண்டும் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக திரும்பி வந்தார். இதனால், STR 48ல் சிம்புவின் கேரக்டர் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், STR 48 ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் SK 21 படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. ஆனால், STR 48 படப்பிடிப்பை இன்னும் ராஜ்கமல் பிலிம்ஸால் தொடங்க முடியவில்லையாம். ப்ரீ புரொடக்ஷன் வேலைகளுடன் லொக்கேஷன் தேடுவதிலும் STR 48 படக்குழு தீவிரமாக உள்ளது. அதனால், இன்னும் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லொக்கேஷன் முடிவானதும் தான் STR 48 படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்களாம். அதன்படி, STR 48 ஷூட்டிங் எப்போது என விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. பூஜையுடன் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்கு திட்டமிட்டுள்ளார்களாம். மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் எனவும் இயக்குநர் தேசிங் பெரியசாமி பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சிம்புவால் தான் STR 48 படப்பிடிப்பு தாமதமாவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சிம்பு ரெடியாக இருப்பதாகவும் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தான் தாமதமாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட் என்பதால், படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே பக்காவாக பிளான் செய்துகொள்ள வேண்டும் என STR 48 படக்குழு உறுதியாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











