STR 48: சிம்புவை இதுக்கு மேல விட்டா பிடிக்க முடியாது... STR 48 ஷூட்டிங் நாள் குறித்த கமல்!

சென்னை: சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் குறித்து மாஸான அப்டேட் வெளியானது.

அதன்படி, பத்து தல படத்தை படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48-ல் நடிக்கவுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், STR 48 படத்தின் பூஜை, படப்பிடிப்பு குறித்து சூப்பரான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 STR 48: Simbus STR 48 shooting likely to begin this week in Chennai

STR 48 ஷூட்டிங் அப்டேட்
சிம்பு தனது 48வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் நடிக்கவுள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். மேலும், அனிருத் தான் STR 48 பட இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், சிம்புவுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தற்காலிகமாக STR 48 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை ரஜினிக்காக தயார் செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. எப்போதுமே சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்ற பஞ்சாயத்து வரும். ஆனால், மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின்னர் நல்ல பிள்ளையாக வலம் வருகிறார் சிம்பு. முக்கியமாக மாநாடு படத்திற்கு வெயிட்டை குறைத்து செம்ம ஸ்லிம்மாக வந்து மிரட்டினார்.

அதேபோல், மீண்டும் பத்து தல ஏஜிஆர் கேரக்டருக்காக வெயிட் போட்ட சிம்பு, தற்போது STR 48 படத்துக்காக திரும்பவும் ஸ்லிம்மாகி மாஸ் காட்டுகிறார். பத்து தல ஷூட்டிங் முடிந்ததோடு தாய்லாந்து பறந்த சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டதோடு ஆளே தாறுமாறாக மாறியுள்ளார். இதே ஃபார்மில் STR 48 படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என கமல் திட்டமிட்டுள்ளாராம்.

அதன்படி, STR 48 படப்பிடிப்பை இந்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளதாம் படக்குழு. பூஜையுடன் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்கு திட்டமிட்டுள்ளார்களாம். மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் எனவும் இயக்குநர் தேசிங் பெரியசாமி ப்ளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 STR 48: Simbus STR 48 shooting likely to begin this week in Chennai

பத்து தல படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த கமல், இனி தாமதிக்க வேண்டாம் என தேசிங் பெரியசாமியிடம் கூறிவிட்டாராம். சில தினங்களுக்கு முன்னர் STR 48 ஷூட்டிங் தொடங்கும் முன்பே கமலிடம் ஒரு பஞ்சாயத்து சென்றுள்ளது. வெந்து தணிந்தது காடு ரிலீஸாகும் போதே அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்திருந்தாராம். இந்தப் படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தில் விருப்பம் காட்டவில்லை என்பதால், ஐசரி கணேஷ் கொஞ்சம் டென்ஷன் ஆனதாக தெரிகிறது. இதனையறிந்த கமல் எஸ்டிஆர் 48 முடியும் வரை எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என ஐசரி கணேஷை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால், இதற்கு மேலும் எஸ்டிஆர் 48 சூட்டிங்கை தாமதிக்க வேண்டாம் என அவசரம் காட்டி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X