STR 48: மன்மதன் ஸ்டைலில் மிரட்ட வரும் சிம்பு... STR 48-ல் காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
சென்னை: பத்து தல படத்தைத் தொடர்ந்து தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
STR 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
அதேபோல், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, STR 48-ல் மன்மதன் பட ஸ்டைலில் மிரட்ட இருக்கிறாராம் சிம்பு.

மன்மதன் ஸ்டைலில் STR 48:சிம்புவின் 48வது படத்தின் அபிஸியல் அப்டேட் சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்தது. அதன்படி, தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சிம்பு, கமல்ஹாசன், தேசிங் பெரியசாமி என முதன்முறையாக இணையும் இந்த மூவர் கூட்டணிக்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், தாய்லாந்து, லண்டன் நாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார் சிம்பு. இதன் மூலம் STR 48 படம் மூலம் சிம்பு ஆக்ஷனில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தேசிங் பெரியசாமி ரெடி செய்த கதையில் தான் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், STR 48 படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி ஹீரோ, வில்லன் என இரண்டு லீடிங் கேரக்டரிலும் சிம்புவே நடிக்கவுள்ளாராம். இதில் சிம்புவின் வில்லன் கேரக்டர் ரசிகர்களுக்கு பயங்கர த்ரில்லிங்காக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவின் கேரியரில் மிக முக்கியமான படம் மன்மதன்.
ஹீரோ-வில்லன் என சிம்பு டபுள் ஆக்டிங் செய்திருந்த இந்தப் படம் இப்போதும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. மன்மதனாக சிம்பு செய்த வில்லத்தனத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது அதை விடவும் இன்னும் மிரட்டலான வில்லன் ரோலில் சிம்பு நடிக்கவுள்ளாராம். இதற்காகவே சிம்பு பல ட்ரெய்னிங் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத கொடூரமான இந்த வில்லன் கேரக்டர் சிம்புவுக்கு மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவிற்கும் புதிதாக இருக்கும் என தெரிகிறது. இதனால் STR 48 படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனாலும் இன்னும் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் முடியாத நிலையில், STR 48 படப்பிடிப்புத் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், STR 48 திரைப்படம் 2024 அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











