STR 48 Update - எஸ்டிஆர் 48 அப்டேட்.. படம் ட்ராப்லாம் இல்லைப்பா.. வெளியான அதிரடி அறிவிப்பு.
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காதபடி சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் எஸ்டிஆர் 48 ட்ராப் ஆகவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இப்படம் தரமான படமாக உருவாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
சிஜி பணிகள் அதிகம்: இதற்கிடையே இப்படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது. அதேபோல் இதில் சிம்பு டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார். படத்தில் சில போர்ஷன்கள் பீரியட் காலத்தில் நடக்கும்படி தேசிங்கு பெரியசாமி படத்தை உருவாக்குகிறார் என்று பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு சொன்ன கதை: முன்னதாக இந்தக் கதையை ரஜினிக்குத்தான் முதலில் தேசிங்கு பெரியசாமி சொன்னார். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. பிறகுதான் சிம்பு உள்ளே வந்திருக்கிறார். ரஜினியிடம் சொன்ன கதையாக இருந்தாலும் சிம்புவுக்கும் இது செட் ஆகும். பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தேசிங்கு ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











