STR 49: சிம்புவுடன் மீண்டும் இணையும் AR ரஹ்மான்... கெளதம் மேனன் மட்டும் மிஸ்ஸிங்!
சென்னை: சிம்பு தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் தனது 49வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ள நிலையில், இயக்குநர் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.

சிம்புவுடன் மீண்டும் இணையும் ஏஆர் ரஹ்மான்:மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் மூலம் மீண்டும் தனது அடுத்த ரவுண்டை தொடங்கியுள்ளார் சிம்பு. இவரது வெறித்தனமான கம்பேக்கை பார்த்த கமல், அவரது ராஜ்கமல் பேனரில் ஒரு படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் 48வது படமாக உருவாகும் இதனை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
முன்னதாக வெந்து தணிந்தது காடு வெளியானதும், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இன்னொரு படத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு. இது வெந்து தணிந்தது காடு 2ம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்புவுக்கும் கெளதம் மேனனுக்கும் இடையே சின்னதாக மோதல் ஏற்பட்டதால் 2ம் பாகம் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் சிம்பு சைலண்டாக ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு கால்ஷீட் கொடுத்ததால், இதுகுறித்து ஐசரி கணேஷ் கமலிடம் முறையிட்டாராம். அதன்பிறகு சிம்பு - ஐசரி கணேஷ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சிம்புவின் 49வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் இல்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சிம்புவின் STR 49 படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் தங்கவேல். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருந்த கார்த்திக் தங்கவேல், சிம்புவுக்காக தரமான கதை ஒன்றை ரெடி செய்துள்ளாராம். ஐசரி கணேஷும் அந்த கதையை ஓக்கே செய்துவிட்டதால் விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
முக்கியமாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து சிம்புவின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். பத்து தல படத்தில் சிம்புவுக்காக தான் கமிட்டானதாக மேடையிலேயே கூறி பலரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏஆர் ரஹ்மான்.
அதனால் இப்போது மீண்டும் சிம்புவின் படத்துக்கு ஓக்கே சொல்லிவிட்டாராம் ஏஆர் ரஹ்மான். இன்னொரு பக்கம் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர். அதேபோல், தனுஷின் 50வது படம், கமலின் 234வது படம் என வரிசையாக பல படங்களை தனது லைன்அப்பில் வைத்துள்ளார். முன்பெல்லாம் சீனியர் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஏஆர் ரஹ்மான், தற்போது இளம் இயக்குநர்களுடன் இணைவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











