STR 49: சர்ச்சைகளுக்கு ஷாக்கிங் கொடுக்க ரெடியாகும் சிம்பு... அவசரமாக வெளியாகும் STR 49 அப்டேட்
சென்னை: சிம்பு தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு தனது 49வது படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
அதில் ஒரு கதையை தேர்வுசெய்துவிட்ட சிம்பு STR 48 சூட்டிங் தொடங்கும் முன்பே அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட முடிவு செய்துவிட்டாராம்.
அவசரமாக வெளியாகும் STR 49 அப்டேட்:சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீஸான பத்து தல கமர்சியலாக ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து STR 48 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

STR 48 படத்திற்காக தாய்லாந்து சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு வந்த சிம்பு, இப்போது லண்டனிலும் சில பயிற்சிகள் எடுத்து வருகிறாராம். சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் தனது ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியிருந்தன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இக்கூட்டணி கன்ஃபார்ம் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படம் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் அல்லது கொரோனா குமார் இரண்டில் எதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் சிம்பு - கெளதம் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கொரோனா குமார் படத்தில் இருந்தும் சிம்பு விலகிவிட்டதாக தெரிகிறது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிம்பு தனது 49வது படத்திற்கு ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக STR 49 படத்தின் அப்டேட்டை வெளியிட சிம்பு ரெடியாகிவிட்டார். பத்து தல படப்பிடிப்பு முடிந்ததில் இருந்தே பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் சிம்பு. அவர்களில் சில முன்னணி இயக்குநர்களின் பெயர்களும் அடிபடுகிறது. பல கதைகள் கேட்ட சிம்பு, இறுதியாக ஒரு ஸ்கிரிப்ட்டை பைனல் செய்துள்ளாராம்.
அதனால், STR 49 படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் அபிஸியலாக அறிவிக்க உள்ளார்களாம். STR 48 படப்பிடிப்பு தொடங்கும் முன்பே STR 49 படத்தின் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் இயக்குநர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications











