STR 50: தனுஷ் ரூட்டில் சிம்பு... STR 50 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்... இப்போதே சம்பவம் ரெடி!
சென்னை: சிம்பு தற்போது STR 48 படத்துக்காக ரெடியாகி வருகிறார். அதேநேரம் தனது 50வது படத்தின் வேலைகளையும் இப்போதே தொடங்கிவிட்டாராம்.

தனுஷ் ரூட்டில் சிம்பு
மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, மீண்டும் கோலிவுட்டில் பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார். வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து கேங்ஸ்டர் ஜானர் படங்களில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. STR 48 படத்துக்காக மார்சியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுத்த சிம்பு, தற்போது உடல் எடையை குறைத்து ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். STR 48 ஷூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் STR 48 ஷூட்டிங் முடியும் வரை வேறு எந்தப் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சிம்பு.
இந்நிலையில், STR 48 ஷூட்டிங் முடிந்ததும் குறுகிய காலத்தில் இன்னொரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதன்படி STR 49 படத்தின் இயக்குநர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தனது 50வது படத்துக்கான வேலைகளையும் சிம்பு சைலண்டாக தொடங்கிவிட்டாராம். 50வது படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என சிம்பு உறுதியாக உள்ளார்.
இதனால், STR 50 படத்தை அவரே இயக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். இதற்காக கதை, திரைக்கதை எழுதும் வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மன்மதன் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய சிம்பு, வல்லவன் படத்தை இயக்கியிருந்தார். வல்லவன் வெற்றிப் பெற்றாலும் அதன் பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
இதனிடையே தனுஷ் தற்போது அவரது 50வது படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் சிம்புவும் தற்போது தனது 50வது படத்தை அவரே இயக்க வேண்டும் என அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, STR 50 படத்தின் ஷூட்டிங் 2024 டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











