புதிய ‘யங் சூப்பர்ஸ்டார்’ ஆனார் பிரேம்ஜி... சிம்புவே வழங்கியதாக அறிவிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற போட்டி ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க இனி, 'யங் சூப்பர் ஸ்டார்' நான் தான் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் பிரேம்ஜி.
'ஐ எம் எ லிட்டில் ஸ்டார்...' எனத் தனது குழந்தைப் பருவத்தில் பாடியவர் நடிகர் சிம்பு. நாயகனாக அறிமுகமானதிலிருந்து லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு யங் சூப்பர் ஸ்டார் பட்டம் சொந்தமானது.
படங்களில் அவரது பெயருக்கு முன் சேர்க்கப்பட்ட இந்த பட்டம், பட போஸ்டர்களிலும் தொடர்ந்தது. அப்போது சிம்புவும் இந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

திடீர் முடிவு...
ஆனால், திடீரென சமீபத்தில் தனது யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் இருந்து அகற்ற முடிவு செய்தார் சிம்பு.

தேவையற்ற சுமை...
யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தேவையற்ற சுமையாக கருதுவதாகவும், இந்த சுமையை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையும் வெளியிட்டார்.

பிரேம்ஜி....
இந்நிலையில், தற்போது அந்தப்பட்டத்தை நடிகர் பிரேம்ஜி ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் தான் யங் சூப்பர்ஸ்டார்....
இது தொடர்பாக பிரேம்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘என் தலைவர் சிம்பு, யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கு கொடுத்துள்ளார். ஆதலால் இந்நாள் முதல் நான் யங் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி' எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க இல்லாம....
மேலும், நீங்க இல்லாம நான் இல்லை' என ரசிகர்களைப் பார்த்து சிம்பு கூறுவதாகவும் பிரேம்ஜி அந்தச் செய்தியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











