எஸ்டிஆர்., என்ன செஞ்சாலும் டிரெண்டிங்கா...சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் ரசிகர்கள்
சென்னை நடிகர் சிலம்பரசன் படத்தில் நடித்தாலும், நடிக்காமல் இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பு ஹேர் ஸ்டைல் மாற்றியது, உடல் எடையை குறைத்தது என அவர் செய்யும் ஒவ்வொன்றையும் கவனித்து, அதனை அவரது ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இன்று காலை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் காபி கப்புடன் சட்டை அணியாமல் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, குட் மார்னிக் என்று மட்டும் தான் குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோவுக்கு லைக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டோ இப்போது டிரெண்டிங்கும் ஆக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 2 லட்சம் பேர் இந்த போட்டோவை லைக் செய்துள்ளனர். 2000 க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். சிம்பு மீதான அவரது ரசிகர்களின் அபிமானம் பிற நடிகர்களை மிரள வைத்துள்ளது.
சிம்பு படம் எப்போது ரிலீசாகும் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஈஸ்வரன் படம் பெரும் விருந்தாக அமைந்தது. இருந்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து தள்ளிப் போகும் மாநாடு படம் பற்றி அறிய தான் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











