புள்ளிங்கோவை கையில் எடுத்த சிம்பு.. இது வேற லெவல் வெறித்தனம்!
சென்னை: குத்து பாடல்கள், ஃபீலிங்ஸ் ஏற்றும் காதல் தோல்வி பாடல்களை பாடுவதில் ஃபேமஸான நடிகர் சிம்பு, முதல் முறையாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்லும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இயக்குநர் டிஸ்னி இயக்கத்தில் உருவாகியுள்ள இரும்பு மனிதன் படத்தில் இடம்பெறும் 'Don't worry புள்ளிங்கோ' என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.
சபரி மலைக்கு மாலை போட்டு ஆன்மிக யாத்திரை சென்று வந்த நடிகர் சிம்பு, தனது அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகியுள்ளார்.

மாநாடுக்கு வெயிட்டிங்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசியல் படமான மாநாடு படத்திற்காக சிம்பு ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். சிம்பு தொடர்பான செய்திகள் வந்தாலே, மாநாடு படத்தின் ஷூட்டிங் எப்போது தான் என்று கேட்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மஹா
மாநாடுக்கு முன்னதாக ஹன்சிகாவின் மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மஹா போஸ்டர் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

புள்ளிங்கோ
தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற புள்ளிங்கோ பாடல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. புள்ளிங்கோவை வைத்து பல யூடியூப் வீடியோக்களும் இந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், Don't Worry புள்ளிங்கோ என்ற பாடலை இரும்பு மனிதன் படத்திற்காக நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

இரும்பு மனிதன்
அறிமுக இயக்குநர் டிஸ்னி இயக்கத்தில் உருவாகியுள்ள இரும்பு மனிதன் படத்தில் இளைஞர்களுக்கு மெசேஜ் சொல்லும்படியான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை சிம்பு பாடினால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய இயக்குநர் டிஸ்னி, சிம்புவை அணுக, படத்தின் லைனை கேட்ட நடிகர் சிம்பு உடனடியாக பாடலை பாடி கொடுத்துள்ளார்.

டோன்ட் வொரி புள்ளிங்கோ
காதல் தோல்வி, தேர்வில் தோல்வி என இளைஞர்கள் சந்திக்கும் தோல்விகளுக்கு கவலை பட வேண்டாம் என்ற ரீதியில் இந்த பாடல் அமைந்துள்ளதாகவும், கே.எஸ். மனோஜ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார். சிம்புவின் இந்த பாடலில் கருத்தும் இருக்கும் குத்து டான்ஸும் இருக்கும் என இயக்குநர் டிஸ்னி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











