For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாம்பும் கழுத்துமா.. பேட்டும் கையுமா.. எல்லாருமே பார்க்க நினைத்த சிம்பு கம்பேக்.. ஈஸ்வரன் வரான்!

  |

  சென்னை: பாம்பும் கழுத்துமா, பேட்டும் கையுமா என சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள 'ஈஸ்வரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

  நடிகர் சிம்புவை அவரது ரசிகர்கள் எப்படி பார்க்க நினைத்தார்களோ, அதே மாதிரி இப்போ கம்பேக் கொடுத்துள்ளார்.

  வரும் பொங்கலுக்கு சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஈஸ்வரன்' படம் திரைக்கு வருகிறது என்பது செம சர்ப்ரைஸ் ஆன செய்தி.

  இப்படி நின்னா எப்படிம்மா.. முன்னழகையும், இடுப்பையும் காட்டி செல்ஃபி போட்ட மாஸ்டர் ஹீரோயின்!

  மணிரத்னம் இயக்கத்தில்

  மணிரத்னம் இயக்கத்தில்

  அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு ஒரு பெரிய கேப் விட்ட சிம்பு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் பக்காவாக நடித்து இருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு கம்பேக் ஆகி விட்டார் என்றே பலரும் கருதி இருந்தனர். ஆனால், அதன் பின்னர் அவரது உடல் எடை ரொம்பவே அதிகரித்து விட்டது.

  யோகி பாபுவுடன் ஒப்பிட்டு

  யோகி பாபுவுடன் ஒப்பிட்டு

  அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கப் போகிறார் என சிம்பு ரசிகர்கள் பேராவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த படத்தில் உடல் எடையை கட்டுப் படுத்த முடியாமல் ரொம்பவே சிம்பு கஷ்டப்பட்ட நிலையில், உடன் நடித்த யோகி பாபுவுடன் எல்லாம் ஒப்பிட்டு கிண்டல் செய்தனர்.

  மாநாடுக்கு முன்பே

  மாநாடுக்கு முன்பே

  ஹன்சிகாவின் மஹா, வெங்கட் பிரபுவின் மாநாடு இந்த இரண்டு படத்தில் ஒரு படத்தில் வெகு சீக்கிரமே சூப்பர் சிம்புவை ரசிகர்கள் பார்க்கலாம் என காத்திருந்த நிலையில், ஏகப்பட்ட பிரச்சனைகள், கொரோனா லாக்டவுன் என மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிம்புவின் தரிசனம் லேட்டாகுமா என நினைத்த நிலையில், ஈஸ்வரனாக வருகிறார் சிம்பு.

  பாம்பும் கழுத்துமா

  பாம்பும் கழுத்துமா

  இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் தற்போது வெளியாகி வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது. நடிகர் சிம்பு, லுங்கியும் சட்டையும் அணிந்து கொண்டு, உடம்பை நல்லா ஃபிட் ஆக்கிக் கொண்டு, கழுத்தில் பாம்பை பிடித்தபிடி ஈஸ்வரனாகவே காட்சி தருகிறார்.

  இப்போ போடுறா பால

  இப்போ போடுறா பால

  வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டிய நாடு, ராஜபாட்டை, ஜீனியஸ், வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில், குறைவான நாட்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஈஸ்வரன் படத்தின் மற்றொரு லுக்கும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் பேட்டும் கையுமாக சிம்பு இருக்கும் போஸ்டரை ஷேர் செய்து இப்போ போடுறா பால என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  தாண்டவ பொங்கல்

  தாண்டவ பொங்கல்

  வரும் பொங்கல் பண்டிகை செம மாஸாக இருக்கும் என்றே தெரிகிறது. தளபதி விஜய்யின் மாஸ்டர், நடிகர் கார்த்தியின் சுல்தான் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. ஈஸ்வரன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், 2021ம் ஆண்டு பொங்கல் ஈஸ்வரனின் தாண்டவப் பொங்கல் என குறிப்பிட்டுள்ளனர்.

  சமூக வலைதளங்களில்

  சமூக வலைதளங்களில்

  மேலும், சமீபத்தில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் சிம்பு இணைந்துள்ளார். தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிம்பு சோஷியல் மீடியாவுக்கு வந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாநாடு படத்திற்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

  English summary
  Actor Simbu come back with a bang in director Susienthiran’s Eeswaran movie. Very short schedule movie will release on coming Pongal 2021.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X