சிம்புவோட மாங்கல்யம் பாட்டு 100 மில்லியன் வியூவ்ஸ் வாங்கியிருக்கு... ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை : சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஈஸ்வரன்.
இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தின் மாங்கல்யம் பாடல் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இந்த பாடல் தற்போது யூடியூபில் சிறப்பான சாதனையை எட்டியுள்ளது.

தமன் இசை
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஈஸ்வரன். கிராமத்து கெட்டப்பில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிதி அகர்வால். தமன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

சிறப்பான சாதனை
முக்கியமாக படத்தின் மாங்கல்யம் தந்துனா என்ற பாடல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலில் நடனமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது யூடியூபில் இந்த பாடல் சிறப்பான சாதனையை செய்துள்ளது.

சிறப்பான சாதனை
முக்கியமாக படத்தின் மாங்கல்யம் தந்துனா என்ற பாடல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலில் நடனமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது யூடியூபில் இந்த பாடல் சிறப்பான சாதனையை செய்துள்ளது.

சிம்பு பாடிய பாடல்
பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள சிம்புவின் பாடல்களிலேயே இந்த பாடல்தான் முதல்முறையாக 100 மில்லியன் வியூக்களை பெற்றுள்ளது. சிம்பு பாடியுள்ள இந்த பாடல் சமீபத்தில் வெளிவந்துள்ள ஹிட் பாடல்களிலும் முதல் 10 இடங்களில் உள்ளது.
தமன் ட்விட்டரில் பாராட்டு
இந்நிலையில் இந்த சாதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ள இசையமைப்பாளர் தமன், பிரதர் சிம்புவின் எனர்ஜியாலேயே இந்த பாடல் இந்த அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பாடலை சிம்புவுடன் இணைந்து பாடியுள்ள ரோஷினியையும் அவர் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











