மாநாடு வேற லெவல்...லேட்டஸ்ட் அப்டேட் தந்த நடிகர்
சென்னை : சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரசிகர்களிடம் வரவேற்பையும், பல விதமான விமர்சனங்களையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து சிம்புவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.

விறுவிறுப்பாக மாநாடு டப்பிங்
மாநாடு படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது லேட்டஸ்ட் தகவலாக டப்பிங் பணிகளும் ஏற்கனவே துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

ஜுன் 21 ல் சிங்கிள் டிராக் பாடல்
இதற்கு முன் படத்தின் டிரைலர் பக்ரீத் அன்று வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதைத் தொடர்ந்து படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடலான "மாஷா அல்லாஹ் " ஜுன் 21 அன்று வெளியிடப்படும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.
Recommended Video

தள்ளி வைக்கப்பட்ட மாநாடு ரிலீஸ்
மாநாடு படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் டைரக்டர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை கங்கை அமரனின் திடீர் மறைவால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

அப்டேட் கொடுத்த உதயா
தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் உதயா, தான் மாநாடு படத்திற்காக டப்பிங் பேசியதை ஃபோட்டோவுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன், மாநாடு டப்பிங். வேறு லெவல் விஷுவல்ஸ், ரொம்ப ஆர்வமா இருக்கு. படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. சிம்பு ராக்கிங். எஸ்ஜே சூர்யா சார், எனது நண்பர் டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி. சுரேஷ் காமாட்சி, நன்றி முதலாளி என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











