எதுக்கு திருமணம் செய்துக்கனும்? மூவ் -ஆன் ஆக நான் யாரோ இல்ல.. நான் சிம்பு.. மனதில் இருப்பதை கொட்டிய STR

மலேசியா: நடிகர் சிம்பு தான் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறார். அவர் வெளியே தலைகாட்டினாலே சினிமா செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறுகிறது. வேறு யாராவது ஏதாவது செய்தால் கூட உடனே சிம்பு குறித்த பேச்சு அங்கு அடிபடுகிறது. தமிழ் சினிமாவின் மாஸ், கிளாஸ் என எல்லாம் கலந்த எவர் கிரீன் எங் ஸ்டாராகவே இருக்கிறார். இப்படி இருக்கும்போது அவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சிம்பு காதல் கிசுகிசுக்களில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிபட்டு வந்தார். அதன் பின்னர் அவர் குறித்த சர்ச்சைகளோ, கிசுகிசுக்களோ காதல் தொடர்பானதாக இல்லை. தான் காதலித்து பிரிந்த நயன்தாராவுடன் கூட இணைந்து படத்தில் நடித்தார். அந்த அளவுக்கு காதல் மற்றும் பிரிவை சிம்பு சிறப்பாக கையாளக் கற்றுக் கொண்டிருந்தார். அதேபோல் நயனும் அதில் கை தேர்ந்தவராக இருந்தார்.

இப்படி இருக்கும்போது, நடிகர் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார் என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். கடந்த ஆண்டு பிரேம் ஜி திருமணம் செய்து கொண்ட போது கூட, தமிழ் சினிமாவின் முரட்டு சிங்கிள் என்றால் அது சிலம்பரசன் தான் என்று எல்லாம் பலரும் பதிவிட்டார்கள். ஆனால் வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ்வது என்பது சிலருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் அது உண்மையிலேயே சவாலானது, இன்னும் சொல்லப்போனால் சித்தரவதைக்குள் நம்மை நாமே நிலை நிறுத்திக் கொள்வதற்கு சமம்.

STR Silambarasan Opens About Why He Not Interested On Marriage There Is Truthful Reason

திருமணம்: பலரால் காதலிக்கப்பட்ட, தானும் காதலித்த சிம்பு, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, தொடர்ந்து கேள்வி எழுப்படுகிறது. அவரது தந்தை டி.ஆர். ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூட மிகவும் வருத்தத்துடன் தனது மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று தெரிவித்தார். இப்படி இருக்கும் போது, மலேசியாவில் நகைக் கடைத் திறப்பு விழாவுக்குச் சென்ற நடிகர் சிலம்பரசனிடம் அவரது திருமணம் குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்தது.

சிம்பு விளக்கம்: அதாவது, திருமணம் நடக்கும்போது நடக்கும். நீங்கள் தனியாக இருக்கிறீர்களா, யாருடனாவது இருக்கிறார்களோ அது மேட்டர் கிடையாது. நீங்கள் ஒழுங்காகவும் நிம்மதியாகவும் இருக்கிறீர்களா என்பதுதான் மேட்டர். சந்தோஷமா இருக்கீங்களா? நாலு பேர் நல்லா நிம்மதியா இருப்பதை போல பார்த்துக் கொள்கிறீர்களா? அவ்வளவுதான் அது போதும். நான் இப்படி பேச காரணமே வாழ்க்கையில் ரொம்ப அடி வாங்கி இருக்கேன்" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X