தடுமாறிய கமல்ஹாசன்! பெருந்தன்மையோடு நடந்து கொண்ட சிம்பு! அகலக்கால் வைக்கிறாரோ?

சென்னை: தமிழ் சினிமாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து நடித்து வருபவர்கள் என்றால் அதில் உலகநாயகன் கமல்ஹாசன் பெயரும் எஸ்.டி.ஆர். சிம்பு பெயரும் கட்டாயம் இருக்கும். இருவரும் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசனின் 234 படம் என்பது கூடுதல் தகவல்.

இவர்கள் இருவரும் தக் லைஃப் படத்தில் நடித்து வந்தாலும், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஒரு படம் உருவாவதாக பேச்சுகள் அடிபட்டது. குறிப்பாக இந்த படத்திற்காக சிம்புவுக்கு அட்வான்ஸ் எல்லாம், ராஜ் கமல் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

Silambarasan Desingh Periyasamy KamalHaasan

சிம்புவும் கமல் ஹாசன் புரெடக்‌ஷன்ஸில் இருந்து நடிக்க அழைக்கின்றார்கள் என கதையைக் கேட்டுவிட்டு ஓ.கே.,வும் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சீக்கிரம் தொடங்கும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில், தற்போது புதிய தகவல் ஒன்று வேகமாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. அதில் ராஜ் கமல் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

விலகிய ராஜ்கமல்: அதாவது ராஜ் கமல் நிறுவனம் இந்த படத்திற்கான தயாரிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக தகவல்கள் உலா வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்தியன் 2 படம் சரியாகப் போகாததுதான் எனவும் கூறப்படுகின்றது. அதாவது இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருந்தால், கமல்ஹாசனுக்கு எதிர்பார்த்த தொகை கிடைத்திருக்கும் அதனை வைத்து இந்த படத்தினை தயாரித்துவிடலாம் என கமல் யோசித்துள்ளார். ஆனால் இந்தியன் 2 சரியாகப்போகாததால், கமல்ஹாசன் இந்த படத்தினை தயாரிக்க முடியாது என சிம்புவிடமும் தேசிங்கு பெருயசாமியிடமும் கூறியுள்ளார்.

Silambarasan Desingh Periyasamy KamalHaasan

அகலகால் வைக்கும் சிம்பு: கமல்ஹாசனின் நிலைமையை புரிந்து கொண்ட சிம்பு, இந்தப் படத்தினை தானே தயாரிப்பதாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளார். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வரும் என்பதால்தான் கமல் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்புவே படத்தினை தயாரிக்க முடிவெடுத்திருப்பதால் இதற்கான பணத்தினை அவர் எங்கிருந்து திரட்டப்போகின்றார் என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகின்றனர். பலர் சிம்பு கமல்ஹாசனின் நிலையைப் புரிந்துகொண்டு எந்த பிரச்னையும் செய்யாமல், கமல் சொன்னதை ஏற்றுக்கொண்டது சிம்புவின் பெருந்தன்மை என்றாலும். ரூபாய் 250 கோடிகள் என்பது மிகப்பெரிய பட்ஜெட். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தினை சிம்பு தயாரிக்க முடிவு செய்திருப்பது என்பது சிம்பு அவசரப்பட்டு அகலக்கால் வைக்கின்றாரோ என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார்: மேலும் இந்த படத்தில் முதலில் ராஜ்கமல் நிறுவனமும் தேசிங்கு பெரியசாமியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்திருந்தனர் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக பேசத்தான் உலக நாயகன் கமல் ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரடியாகச் சென்று சந்தித்தார் எனவும் கூறப்படுகின்றது. அப்போதே இந்த படத்தின் பட்ஜெட் 250 கோடியாகத்தான் இருந்தது என்ற பேச்சும் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X