Arasan Promo: தாறுமாறாக இருக்கும் அரசன் புரோமோ.. சிம்புவுடன் இவரும் நடிச்சு இருக்காரா?

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் அரசன். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் நடந்த காலகட்டத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று வெற்றி மாறனே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் புரோமோ இன்று அதாவது அக்டோபர் 16ஆம் தேதி மாலை தியேட்டரில் வெளியிடப்பட்டது.

தியேட்டரில் புரோமோவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் பலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்கள். சிம்புவின் லுக் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்ற பதிவுகள் எக்ஸ் பக்கத்தில் நிரம்பி வழிகிறது. இது ஒரு புறம் இருக்க, புரோமோவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே புரோமோவப் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து காணப்பட்டனர்.

STR Simbu Arasan Promo Receives Positive Reviews From Fans Director Nelson Plays Cameo

ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட டைட்டில் புரோமோவில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை. ஆனால் அந்த புரோமோ எங்கு முடிந்ததோ, அங்கிருந்துதான் இந்த புரோமோ தொடங்குகிறது. இதில் சிம்பு கையில் ரத்தம் சொட்டும் அரிவாளுடன் நடந்து வருகிறார். இரவு நேரத்தில் சிம்பு நடந்து வருவதால், அவரது முகம் சரியாக தெரியவில்லை. அப்போது மின்னல் வருவது போலவும், அந்த மின்னலில் சிம்புவின் முகம் தெரிவது போலவும் காட்சி அமைத்து சிம்பு ரசிகர்களை கதறவிட்டுள்ளார் வெற்றி மாறன்.

அதேபோல் நெல்சனிடம் தனது கதையைச் சொல்லிவிட்டு, கோர்ட் வளாகத்திற்குள் ஓடுகிறார் சிம்பு, அப்போது நெல்சனைப் பார்த்து, என்னோட கதையில் யாரை சார் நடிக்க வைக்கப்போறீங்க என்று கேட்கிறார். உடனே நெல்சனோ, உங்க மனசுலயே யாராவது இருப்பாங்களே அவங்களை சொல்லுங்க என்று கேட்கிறார். உடனே சிம்புவோ, தனுஷ் சாரை நடிக்க வைங்க சார் நல்லா இருக்கும் என்று கூறுகிறார். இந்த டயலாக் தியேட்டரில் இருந்த ரசிகர்களை மேலும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. புரோமோ தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Read more about: vetri maaran simbu str silamabarasan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X