முடி எல்லாம் கொட்டி.. அடையாளமே தெரியாத வகையில் மாறிட்டாரே.. 69 வயதில் தள்ளாடும் டி.ஆர்.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் பல துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள். அவர்களில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், என தொடர்ந்து தனது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் விஜய டி. ராஜேந்தர். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. 69 வயதான டி. ராஜேந்தர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்ததால், அவரைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கும் டி.ராஜேந்திரனை ரசிகர்கள் டி.ஆர் என்றே அழைத்து வருகிறார்கள். அண்ணன் தங்கை செண்டிமெண்ட், அடுக்குமொழி வசனங்கள், பதிலடி வசனங்கள் என பலவற்றிற்கு புகழ் பெற்றவர் டி.ஆர். பிரேமம் படம் வந்த பின்னர் தாடி மீது பல நடிகர்களுக்கும் பல இளைய தலைமுறையினருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டது. ஆனால், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெரும்பாலான சினிமாக்களில் தாடி வைத்து நடித்தவர். இதனால் கிராமப்புற மக்களிடையே, தாடிக்காரன் என அறியப்பட்டவர். இன்றைக்கும் இவரது படங்களை உருகி உருகி பார்க்கும் தாய்மார்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளார்கள்.

STR Simbu T Rajendar T Rajendar Old Age

டி.ஆர். டச்: ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து வெளியான சிக்கிடு வைஃப் பாடலில் டி.ஆர். டச் இருக்கிறது என்றால், அது தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் எனலாம். இவரது மகன்களான சிலம்பரசன் மற்றும் குரலரசன் தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார்கள். இதில் சிம்பு அதாவது சிலம்பரசன் தனது தந்தையைப் போலவே அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டி.ஆர் கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். டி.ஆர். சிகிச்சை மேற்கொண்ட போது அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்டார் சிம்பு. சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பின்னர், சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் உள்ளார்.

அதிர்ச்சி: இப்படியான நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, டி. ராஜேந்திரனைப் பார்த்த ரசிகர்கள், நிஜமாவே அவர்தானா? என அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி.ஆர், நிகழ்ச்சியில் மிகவும் பொறுமையாக நடந்து வந்தார். மேலும் அடுக்கு மொழியில் பட்டாசு வெடிப்பதை போல் பேசும் டி.ஆர், மிகவும் அமைதியாக பேசியுள்ளார்.

69 வயது: இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் முடி எல்லாம் கொட்டி, தொப்பி அணிந்திருந்ததை பார்த்து பலரும் பரிதாபமடைந்தனர். சினிமாவில் பல நடிகர்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில் நடிகைகளைத் தொடாமல் நடித்த நடிகர் என்றால் அது டி.ஆர். தான். இயக்குநர் டி.ராஜேந்திரனுக்கு தற்போது 69 வயது ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X