Simbu: தினமும் இரண்டு முறை அதைச் செய்யும் சிம்பு.. இதனால் பெண்கள் மீது தனி மதிப்பு வந்துடுச்சாம்!

சென்னை: நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் இருப்பதால், சினிமாவில் நல்ல அனுபவம் கொண்டவராக உள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என மிளிர்கின்றார். சிம்புவுக்கு தற்போது பெண்கள் மீது தனி மதிப்பு வந்துவிட்டது என்றும், அதற்கான காரணம் குறித்த தகவல்களும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.

நடிகர் சிம்புவை பொறுத்தவரையில் ஒரு காலகட்டத்தில், படத்தில் நடிக்க கமிட ஆகி விட்டால், சரியான முறையில் படத்தில் நடித்துக் கொடுக்க மாட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாகத்தான் வருவார். சில நாட்கள் வரவே மாட்டார் என்றெல்லாம் கூட தகவல்கள் வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல், நடிகைகள் சிம்புவிடம் டிஸ்டன்ஸ் மெயின் டையின் செய்ய விரும்புவார்கள் என்றெல்லாம் தகவல்கள் உலா வந்துள்ளது. ஆனால் இப்போது சிம்பு முற்றிலும் வேறு ஒரு நபராக உள்ளார்.

str simbu str 50

படப்பிடிப்புத் தளத்தில் சொன்ன நேரத்தில் வந்து நிற்கிறார். இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுகிறார். இதனால் சிம்பு குறித்து தற்போது திரைத்துறையில் அனைத்தும் பாசிட்டிவ் தகவல்களாகவே உலா வருகிறது. இப்படியான நிலையில்தான் அவரது நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள், வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறிவிப்புகள் ஒரு புறம் இருந்தாலும் இவரது நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம், தக் லைஃப். இந்தப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில், சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.

சிம்பு: சிம்புவின் 49 வது படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகின்றார். 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும் 51 வது படத்தினை அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குகின்றனர். இது தொடர்பான அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தனது 50 வது படத்தை தானே தயாரிக்கிறார் சிம்பு.

பெண்கள் மீது மதிப்பு: சிம்பு தக் லைஃப் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்தார். இது மட்டும் இல்லாமல், அதிக அளவில் முடியும் வளர்த்துக் கொண்டார். தக் லைஃப் படத்தில் சிம்புதான் வில்லன் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தனது அடுத்த படங்களின் கமிட்மெண்ட்டுக்காக, நீளமாக வளர்த்த முடியை சிம்பு வெட்டவுள்ளார். இதற்கிடையில், சிம்பு இந்த அளவிற்கு முடியை வளர்க்கவும், பராமரிக்கவும், பெரும் சிரமப்பட்டு உள்ளார். தினமும் இரண்டு முறை குளிக்கும் சிம்பு, தனது தலைமுடியை உலர்த்துவதற்குள் அவருக்கு போதும் போதும் என ஆகிவிடுகின்றது. இதனால் இப்போதெல்லாம் பெண்கள் மீது, அதன் காரணமாகவே தனி மதிப்பும் மரியாதையும் சிம்புக்கு வந்துவிட்டது என கூறுகின்றனர்.

ஆவல்: இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பினை பார்க்கும்போது, சிம்புவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் செம பிஸியான ஆண்டுகளாக இருக்கப்போகின்றது. எனவே, சிம்பு ரசிகர்கள் அதிகப்படியான ஆவலாக உள்ளார்கள். குறிப்பாக, சிம்புவின் புது லுக்கில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X