Good Bad Ugly: GBU-வில் STR.. தல அஜித்துக்காக சிம்பு எடுத்த முடிவு.. ஃபேன் பாய் சம்பவம் உறுதி!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படம் வரும், ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படம் குறித்த அப்டேட்டுகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் படம் குறித்த தரமான அப்டேட் ஒன்று சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த டீசரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தில் பார்த்துள்ளார்கள். படத்தின் டீசருக்கே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரின் தீவிரமான ரசிகர் என்பதால், படம் முழுவதும் ஃபேன் பாய் சம்பவங்களை அள்ளி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது படத்தின் முதல் பாடல் நாளை அல்லது நாளை மறுநாள் அதாவது மார்ச் 13 அல்லது மார்ச் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குட் பேட் அக்லி படத்தின் ஹேஸ்டேக் டிவிட்டர் பக்கத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னும் சரியாக நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளதால் படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவிஸ் நிறுவனம் படத்தை உலக அளவில் புரோமோஷன் செய்ய திட்டம் தீட்டி வருகிறது.

குட் பேட் அக்லி: படத்தை 9ஆம் தேதி இரவு பிரீமியர் ஷோவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவலும், ஏற்கனவே புஷ்பா 2 படத்தால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், பிரீமியர் ஷோ இல்லை எனவும் இரு விதமான தகவல்கள் உலா வருகிறது. ஆனாலும் படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்த நான்கு வாரங்களில் வாரத்திற்கு ஒன்று என கட்டாயம் இருக்கும் என்பது மட்டும் உறுதி. அந்த வகையில்தான் முதல் பாடலை இந்த வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என கூறப்படுகிறது. வேதாளம் படத்தில் ஆளுமா டோலுமா பாடலை எழுதிய ரோகேஷ் தான் இந்த முதல் பாடலையும் எழுதியுள்ளாராம்.
டி.ஆர்: இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இன்னொரு பாடலை இயக்குநர் டி.ஆர். பாடியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் படம் முழுவதும் திருவிழா போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அஜித் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தமிழ் திரையுலகில் இந்த படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலைக் குவித்த படமாக, இது மாறும் என்றும், அஜித் திரை வாழ்க்கையில் ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள்: குட் பேட் அக்லி படத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என திரைத்துறையில் பலர் நினைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம், அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக பெரும் தோல்விப் படமாக மாறியது. இது மட்டும் இல்லாமல், படம் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் படத்தில் மாஸான காட்சிகள் எதுவும் இல்லை என்பதுதான். இப்படி இருக்கும்போது, குட் பேட் அக்லி படத்தின் டீசரில் மாஸ் காட்சிகளைக் கொண்டு உருவாக்கி அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

விடாமுயற்சி : விடாமுயற்சி சரியாக போகாததால், பலரும் அஜித் குறித்து பலரும் பலவிதமாக விமர்சித்தார்கள். இந்த விமர்சனங்களால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. அதாவது, குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல், பிப்ரவரி மாதம் தான் விடாமுயற்சி படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி, சரியாக போகாததால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. இதனால் தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இட்லி கடை: அதாவது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியானது. இப்படி இருக்கும்போது, குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மட்டும் இல்லாமல், படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இட்லி கடை படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறிதான்.

சிம்பு: குட் பேட் அக்லி படத்தை பொறுத்தவரை த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஷாலினி மற்றும் சிம்ரன் நடித்துள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் உலா வந்தது. இப்படி இருக்கும்போது தற்போது படத்தில் நடிகர் சிம்புவும் இருப்பதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதால், இந்த படத்தில் தீவிரமான அஜித் ரசிகரான சிம்புவையும் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வைத்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தில் சிம்புவின் குரலாவது படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அது அஜித் ரசிகர்களுக்கு தியேட்டரில் விருந்தாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேள்விப் பட்ட ரசிகர்கள் செம குஷியாக உள்ளார்கள். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











