கன்னட சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த சிம்பு.. எஸ்டிஆர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

By Vignesh Selvaraj

Recommended Video

கர்நாடகாவில் சிம்புவுக்கு கட் அவுட்! வைரலாகும் சிம்புவின் #UNITEDFORHUMANITY- வீடியோ

சென்னை : நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் கொடுத்த ஒரு ஐடியா தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்பு பரவலான விவாதத்திற்கு உள்ளானது. காவிரி விவகாரத்தில் அரசியல் செய்பவர்களை வெளிப்படுத்துவதற்காக கன்னட மக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்றார்.

சிம்புவின் கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் பலர் அங்கிருக்கும் தமிழர்களுக்கு கிளாஸில் தண்ணீர் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து ஹேஸ்டேக்குடன் ட்விட்டரில் ட்ரெண்டாகினர். இந்த விஷயம் நல்ல முன்னெடுப்பாக பாராட்டப்பட்டது.

STR sings a kannada song for first time

தான் சொன்னது கன்னடர்களுக்குப் புரிந்தது; ஆனால், தமிழர்களுக்குப் புரியவில்லை என ஆதங்கத்தோடு இதுகுறித்துப் பேசினார் சிம்பு. இந்நிலையில், கன்னடப் படத்திற்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சிம்பு.

'இருவுடெல்லா பிட்டு' எனும் கன்னட படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் சிம்பு. தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள சிம்பு, கன்னடத்தில் பாடுவது இதுவே முதல்முறை.

கன்னட மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தைப் பெற்றிருக்கும் சிம்பு, இந்தப் பாடலின் மூலம் இன்னும் நெருக்கமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி அவரது கன்னடத்தில் அதிகமானோரைப் போய்ச் சேரும் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X