விக்னேஷ் சிவன் இயக்குகிறாரா? சிம்பு நடிப்பில் உருவாகிறது போடா போடி 2.. அடுத்த வருடம் ஷூட்டிங்!
சென்னை: சிம்பு நடிப்பில் போடா போடி படத்தின் அடுத்த பாகம், அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.
Recommended Video
நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக அறிமுகமான படம், 'போடா போடி'. இதில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.
விடிவி கணேஷ், ஷோபனா, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

வரவேற்பு இல்லை
இந்தப் படம் மூலம்தான் அவர் இயக்குனராக அறிமுகமானார். இது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து பிரபலமானார்.

போடா போடி 2
இந்நிலையில், போடா போடி படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இதை பதம் குமார் தயாரிக்கிறார். இவர்தான் முதல் பாகத்தையும் தயாரித்து இருந்தார். பாவக் கதைகள் ஆந்தாலஜியில், விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் கதையில் அஞ்சலியின் தந்தையாக நடித்திருந்தார்.

ரித்திகா பால்
இந்தப் படத்தை, முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறாரா, வேறு யாரும் இயக்குகிறார்களா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இதில் ரித்திகா பால் என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் இந்தியில் அறிமுகமாக வேண்டியவர். அதற்கு முன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நடிப்புப் பயிற்சி
இதற்காக ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் நடிப்புப் பயிற்சி பெற்று வருவதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. நடிகர் சிம்பு, இப்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











