இழுத்து மூடப்பட்ட வாடிவாசல்.. பல கோடி நஷ்டத்தில் கலைப்புலி தாணு?.. வெற்றிமாறனுக்கு வைக்கப்பட்ட செக்?
சென்னை: சிம்புவும், வெற்றிமாறனும் இணைந்திருக்கும் அரசன் படத்தின் மீதுதான் பலருக்கும் கவனம் இருக்கிறது. இரண்டு பேருமே சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகு இப்போதுதான் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார். இதற்கிடையே தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றி. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று திரைத்துறையில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தார். அதில் அவருடன் அமீர் உள்ளிட்டோர் எல்லாம் நடிப்பதாக இருந்தது. படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. அனிமேட்ரானிக்ஸ் பணிகள் எல்லாம் லண்டனில் நடந்துவந்தன. பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த இந்தப் படம்; மேற்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை. அதற்கு யூகங்களாக ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. ஒருகட்டத்தில் இனிமேலும் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து வாடிவாசல் படத்தை இழுத்து மூடிவிட்டார்கள்.

சிம்புவுடன் கூட்டணி: வாடிவாசல் படம் ட்ராப்பானாலும் கலைப்புலி தாணுவுக்கு படம் செய்வது என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருந்தார். எனவே வாடிவாசல் படத்துக்கான ஸ்லாட்டில் இன்னொரு கதையை கையில் எடுத்தார். படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை 2003ஆம் ஆண்டு வெற்றி எழுதியது கவனிக்கத்தக்கது. சிம்புவும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதை தேர்விலும், இயக்குநர் தேர்விலும் ரொம்பவே கவனமாக இருக்கிறார் எஸ்டிஆர். அனுபவம், இளமை என இரண்டு தரப்பு இயக்குநர்களுடனும் வேலை செய்துவருகிறார்.
பெரிய சர்ப்ரைஸ்: வெற்றிமாறனுடன் சிம்பு இணையப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதாவது இவர்கள் இணைகிறார்களே என கொண்டாடுகிறார்கள். படத்திலிருந்து சின்னதாக வெளியான க்ளிம்ப்ஸே அவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ்டை பெற்றது. படத்துக்கு அனிருத் இசையமைத்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் பல கட்டங்களாக மதுரை மற்றும் இதர பகுதிகளில் நடந்துவருகிறது.
இன்னொரு படம்: சிம்புவுக்கும் ஐசரி கணேஷுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அரசன் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. ஒருவழியாக அந்த பிரச்னை முடிவடைந்து மீண்டும் தொடங்கிவிட்டது. அதேசமயம் அந்த கேப்பில் ராஜன் வகையறா என்ற படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்கினார் வெற்றி. இந்தப் படத்துக்கு கலைப்புலிதான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் குறித்து புதிய தகவல் ஒன்று திரைத்துறையில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது வாடிவாசல் படத்தின் அனிமேட்ரோனிக்ஸ் பணிகள், வெற்றிமாறன் சம்பளம் எல்லாம் சேர்த்து தாணு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தாராம். இப்போது அது வட்டியோடு 40 கோடி ரூபாய்வரைக்கும் வருகிறதாம். இந்த இழப்புக்கு வெற்றியும் ஒருவகையில் காரணம் என்றும்; அதனால் அரசன், ராஜன் வகையறா ஆகிய இரண்டு படங்களுக்கும் வெற்றிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
