Director Desingh Periyasamy: தர லோக்கல் பீரியட் படம்.. STR48 படத்தின் சீக்ரெட் சொன்ன இயக்குநர்!

சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றி அவரை மேலும் உயர்த்தியுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக பல மாதங்கள் வெளிநாடுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் போன்றவற்றை பயிற்சித்து வந்தார் சிம்பு.

நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி STR48 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் கமல்ஹாசன் இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு சிம்புவும் நன்றி தெரிவித்துள்ளார். நாளைய தினம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை வெற்றிப்படமாக கொடுத்துள்ள தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்துள்ளார். இந்தப் படம் குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

STR48 movie Director Desingh Periyasamy expressed his happiness on Simbu and his talents

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் STR48 படத்தில் கமிட்டானார் சிம்பு. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் போன்றவற்றை பயிற்சி செய்துவந்தார் சிம்பு. படத்திற்காக நீண்ட தலைமுடியையும் வளர்த்துள்ளார்.

STR48 படம்: ஆனால் படம் குறித்த அடுத்தடுத்த எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்த நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க செய்துள்ளார். நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை STR48 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில், இந்த கேரக்டர்களை வெளிப்படுத்தும்வகையில் தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தேசிங்கு பெரியசாமியின் இன்டர்வியூ: இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் கேரக்டர் குறித்து முன்னதாக படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசிய வீடியோ தற்போது அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. சிம்பு பல திறமைகளை கொண்டவர் என்று சுட்டிக் காட்டியுள்ள தேசிங்கு பெரியசாமி, அவரது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு ஒரே படத்தில் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கு ஆக்ஷன் அதிகமாக இருந்ததாகவும் ஆனால் நடனம் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறிய தேசிங்கு பெரியசாமி, இந்தப் படத்தின் கதையை கேட்ட கமல்ஹாசன், தம்பி சிம்புவின் ஒட்டுமொத்த திறமைகளையும் இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று கூறியதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பக்கா தர லோக்கல் பீரியட் படம்: சிம்புவின் டான்ஸ், ஆக்ஷன் திறமைகளுக்கு தீனிப்போடும் படமாக STR48 படம் அமையும் என்றும் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். ரசிகர்களுக்கும் இந்தப் படம் சிறப்பான என்ஜாய்மெண்டை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். படம் பீரியட் படமாக உள்ளதால் கிளாசிக்காக இருக்காது, பக்கா தர லோக்கல் பீரியட் படமாக படம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படம் அழகான தருணங்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தேசிங்கு பெரியசாமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X