பாலிவுட் நடிகை ப்ரியாவும், ஸ்ரீதேவியும்: இது என்ன விதியா, வினோதமா?

By Siva

Recommended Video

ஸ்ரீதேவி, பிரியா மர்ம ஒற்றுமை- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷ் போன்றே ஸ்ரீதேவியும் பாத்ரூமில் உயிர் இழந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிர் இழந்தார். அவரின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது.

அவருக்கும், பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷுக்கும் இடையே ஒற்றமை உள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

1970ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ப்ரியா ராஜ்வன்ஷ் ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1992ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ஸ்ரீதேவி ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

ஹீர் ராஞ்ஹா படத்தை இயக்கிய சேத்தன் ஆனந்துடன் ப்ரியா வாழ்ந்தார். மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் சேத்தன் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சேத்தனின் தம்பிகள் தேவ் ஆனந்த், விஜய் ஆனந்த்.

அனில் கபூர்

அனில் கபூர்

ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்தார். போனி கபூருக்கு அனில் கபூர், சஞ்சய் கபூர் என்று இரண்டு தம்பிகள் உள்ளனர். ப்ரியா, ஸ்ரீதேவி இருவருமே திருமணமான ஆண்களின் வாழ்வில் வந்தவர்கள்.

பாத்ரூம்

பாத்ரூம்

2000ம் ஆண்டு ப்ரியா மும்பையில் உள்ள வீட்டின் பாத்ரூமில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

பாத்டப்

பாத்டப்

ப்ரியாவை போன்றே ஸ்ரீதேவியும் பாத்ரூமில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. பின்னர் அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறப்பு

இறப்பு

ப்ரியா இறப்பதற்கு முன்பு மது அருந்தியது தெரிய வந்தது. ஸ்ரீதேவியும் அதிக அளவு மது அருந்தி போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X