டெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்!

By

டெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பெயர், தெரு ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா ஒடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். சிபிஐ, விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ராஜ்புத் சாலை

ராஜ்புத் சாலை

இதற்கிடையே, பீகாரில் சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவன ரவுண்டானாவிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆண்ட்ரூஸ் கன்ச்

ஆண்ட்ரூஸ் கன்ச்

இந்நிலையில், டெல்லியில் உள்ள தெரு ஒன்றுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கன்ச் என்ற தெருவுக்கு நடிகர் சுஷாந்த் சிங் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெற்கு டெல்லி மாநகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதற்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கவுன்சிலர்

காங்கிரஸ் கவுன்சிலர்

இதை தெற்கு டெல்லி காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத் தெரிவித்துள்ளார். விரைவில் இதன் திறப்பு விழா நடக்க இருக்கிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரை தெரு ஒன்றுக்கு சூட்டுவது தகுதியானதுதான் எனவும் அவர் கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் 35 வது பிறந்த நாளை முன்னிட்டு இதை அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X