twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வாரமும் படங்கள் ரிலீஸ் இல்லை... தமிழகத்தில் நீடிக்கும் ஸ்ட்ரைக்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

    சென்னை : தியேட்டர்களில் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தென்னிந்தியத் திரையுலகினருக்கும் இடையே மோதல் இருந்தது.

    டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகக் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், அவற்றை குறைக்க வேண்டும் என்றும் திரையுலகங்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.

    அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தென்னிந்திய திரையுலக தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் ஸ்ட்ரைக் செய்தனர். மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்கிறது.

    கடுமையான எதிர்ப்பு இல்லை

    கடுமையான எதிர்ப்பு இல்லை

    கேரளா மாநிலத்தில் ஒரு நாள் மட்டும் தியேட்டர்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கர்நாடகாவில் இது பற்றி பெரிதாக எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தினார்கள்.

    20 சதவீத கட்டண குறைப்பு

    20 சதவீத கட்டண குறைப்பு

    டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தெலுங்குத் திரையுலகினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் 20 சதவீத கட்டணக் குறைப்புக்கு சம்மதித்தார்கள். ஆனால், 25 சதவீதம் குறைக்க வேண்டும் என தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    வலியுறுத்தல்

    வலியுறுத்தல்

    அதற்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் சம்மதிக்கவில்லை. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. மற்ற மாநிலங்களில் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்கிறது.

    திரையரங்கு உரிமையாளர்கள்

    திரையரங்கு உரிமையாளர்கள்

    இதனிடையே, புதிய படங்கள் வெளிவராததால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, தியேட்டர் உரிமையாளர்களும் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

    English summary
    Cine industry has waged warfare for digital service companies to charge higher fees and reduce them. Following this, the South Indian filmmakers have been striking for the past week. The strike ends in other states and continues in Tamil Nadu only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X