Don't Miss!
- Automobiles
சொகுசா இருக்கும்... சூப்பரான லேண்ட் ரோவர் காரை வாங்கிய பிரபல நடிகர்... இவரை உங்களுக்கு யார்னு தெரியுதா?
- Technology
ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கு சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
- News
77 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை.. வெறும் 17 டிகிரிதான்.. மே மாதத்தில் பெங்களூர் "ரெக்கார்டு!"
- Finance
ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA
- Sports
கடைசி நேர திருப்பம்.. சிஎஸ்கேவின் தோல்வியால் தலைவலி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள் எது??
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சமுத்திரகனி சாம்ராஜ்யம்.. வெல்வோம்னு சொல்லியே மனுஷன் வாழ்கிறார்.. ஏகே61 படத்திலும் முக்கிய ரோலாம்
சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் அப்பாவாக, நண்பனாக வில்லனாக நடித்து அசால்ட்டு காட்டுகிறார் நடிகர் சமுத்திரகனி.
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து நேற்று வெளியான மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மற்றும் இன்று வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் டான் என சமுத்திரகனியின் சாம்ராஜ்யாம் நீள்கிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் டிப்பில் உருவாகி வரும் ஏகே61 படத்திலும் சமுத்திரகனி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும்
விஜய்
நட்சத்திர
கொண்டாட்டம்...
எங்கங்கே
நடக்குதுன்னு
தெரிஞ்சுக்கலாமா?

‘வெல்வோம்' சமுத்திரகனி
சக சினிமா கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக எப்போதுமே ‘வெல்வோம்' என பேசி வரும் நடிகர் சமுத்திரகனி தொடர்ந்து வெற்றிகளை பெற்று பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை அள்ளி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போதைக்கு செம பிசியாக இருக்கும் நடிகர்களில் சமுத்திரகனி முன்னிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

ராஜமெளலி படத்தில்
பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு மாமா கட்டப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார். அதே போல ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கு மாமாவாக நடித்து அசத்தி இருப்பார் நடிகர் சமுத்திரகனி. ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனிக்கு இன்னமும் சற்று கூடுதலாக வலிமையான காட்சிகளை வைத்திருக்கலாம் என அந்த படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு சமுத்திரகனியின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.

மகேஷ் பாபுவுக்கு வில்லன்
அலா வைகுந்தபுரமுலோ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்த சமுத்திரகனியை அப்படியே அலேக்காக மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்திற்கும் வில்லனாக போட்டு விட்டனர். கீர்த்தி சுரேஷுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரகனி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு அப்பா
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரஜினி முருகன் படத்தில் நடித்து மிரட்டிய சமுத்திரகனி டான் படத்தில் கண்டிப்பான அப்பாவாக நடித்துள்ளார். சமுத்திரகனிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி டான் படத்தில் வொர்க்கவுட் ஆகி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சமுத்திரகனி அடுத்து யாருடன் நடிக்கிறார் என்பது குறித்த ஹாட்டான அப்டேட் கிடைத்துள்ளது.

ஏகே 61ல் ஆன்போர்ட்
போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் ஏகே 61 படத்தில் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் சமுத்திரகனி அஜித் படத்தில் இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வினோதய சித்தம் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கி வருகிறார் சமுத்திரகனி என்பது குறிப்பிடத்தக்கது.
-
12th Man Twitter Review: மோகன்லால், ஜீத்து ஜோஷப் த்ரிஷ்யம் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினார்களா?
-
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!
-
தாலி கட்டிய புகைப்படத்தை வெளியிட்டு.. உருக்கமான போஸ்ட் போட்ட நடிகை நிக்கி கல்ராணி.. ஒரே காதல் தான்!