STR49 3 ஹீரோயின்களாம்.. கயாடு லோஹருக்கு தர்ம சங்கடமாம்பா.. சிம்பு கொடுத்து வைத்தவர்!

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, பார்க்கிங் பட இயக்குநர் என சிம்பு நடிக்கும் படத்தின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் கமலுடன் இணைந்து தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு முன்பை விட படு ஸ்பீடாக இருக்கும் போது ஒரு சூடான செய்தி வெளியாகிருக்கிறது. அவர் நடிக்கும் 49ஆவது படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் செம வைப்புடன் காத்திருக்கின்றனர்.

டி.ஆர். மகனாக சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும் பின்பு பிற இயக்குநர்களின் படங்களில் நடித்து வெற்றிகொடி நாட்டியவர் சிம்பு. ஆனால், ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெரியரை கெடுத்துக்கொண்டார். இதனால், தயாரிப்பாளர்களுக்கும் சிம்புவிற்கும் பிரச்னைகள் எழுந்தது. பின்னர் ரெட்கார்டு என்ற சர்ச்சையும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் நடித்த ஒரு பாடலில் எனக்கா ரெட் கார்டு என்ற வசனம் இடம்பெறும் பாடலை பாடி புயலை கிளப்பினார். பிறகு மாநாடு ஹிட் கொடுத்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அடுத்த வெற்றிப்படத்தை அவர் கொடுக்கவில்லை. அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

STR s 49th film will feature 3 heroines

பேக் அடித்த கமல்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பது உறுதியானதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆனால், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் பேக் அடித்தது. அதற்கு காரணம் சிம்பு நடித்த முந்தைய படங்கள் தான் என தகவல் வெளியானது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும், டிஜிட்டல் ரைட்ஸ் கம்மியான விலைக்கே கேட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் யோசித்திருக்கிறது. இதன் பின்னர் இப்படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் அப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு காரணம் இசையமைப்பாளர் யுவன்தான் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஸ்வீட்ஹார்ட் பட மேடையில் தெரிவித்தார்.

STR 49 அப்டேட்: சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு புதுவிதமான சிக்கல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதையும் சமாளித்து அவர் படம் வெளியாகிறது. பல பிரச்னைகள் வந்தாலும் சிம்புவை நேசிக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் இயக்கும் STR 49 படத்தின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படம் தொடங்குவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. காரணம் ஹரிஷ் கல்யாண் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மூலம் தான் சிம்புவிற்கு பார்க்கிங் பட இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்து போனதால் ஓகே சொல்லியிருக்கிறார் சிம்பு.

STR s 49th film will feature 3 heroines

3 கதாநாயகிகள்: இந்த படத்தில் குத்து, தம், கோவில் படங்களில் நடித்த கல்லூரி பையனாக சிம்பு நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற கயாடு லோஹர் இப்படத்தில் நடிப்பது உறுதியானது. இணையத்தில் அதிகம் கொண்டாடப்படும் நாயகியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்படத்தில் பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சிம்பு படத்தில் 2 நாயகி என்றாலே குஷிதான். தற்போது 3வது ஹீரோயின் பெயர் அடிபடுகிறது. அது கன்பார்மா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த நடிகை நடித்தால் படம் பான் இண்டியாதானாம். சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாஹூரை இப்படத்தில் நடிக்கை வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

STR s 49th film will feature 3 heroines

அவரும் இப்படத்தில் இணைந்தால் சிம்பு - மிருணாள் காம்பினேஷன் வேற லெவலில் இருக்குமாம். காதலிக்க அவருக்கு சொல்லியா தரணும் என ரசிகர்கள் இப்போதே பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனும் படு பிஸியாக உழைக்கிறாராம். அதைத்தொடர்ந்து 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் எனவும் செய்திகள் வெளியானது. இப்போது ராம்குமார் பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X