twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இந்தி நடிகரின் மகனை காதலித்த புதுமுக நடிகை தற்கொலை

    By Siva
    |

    மும்பை: மும்பையில் புதுமுக இந்தி நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுமுக நடிகை சைய்யாம் கன்னா(28). தி ஹான்டட் ஹவுஸ் படத்தில் நடித்தவர். அடுத்ததாக அவர் நடித்த தி லாஸ்ட் ஹாரர் படம் ரிலீஸாக உள்ளது.

    மும்பையில் வசித்து வந்த சைய்யாம் கன்னா கடந்த 30ம் தேதி தனது சகோதரி ரியாவிடம் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். ரியா கடைக்கு செல்லும் முன்பு அவரிடம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும், நான் தூங்கப் போகிறேன், அதனால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைய்யாம் தெரிவித்துள்ளார்.

    Struggling actress commits suicide

    கடையில் இருந்து திரும்பி வந்த ரியா சைய்யாமின் அறையில் இருந்து ராக்ஸ்டார் பட பாடல் ஓடுவதை கேட்டுள்ளார். கதவு சாத்தியிருந்ததால் சைய்யாம் தூங்குகிறார் என்று ரியா நினைத்துக் கொண்டார். ஆனால் அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து ரியா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இது குறித்து ரியா கூறுகையில்,

    என் சகோதரி பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து வந்தார். ஆனால் அவர் சைய்யாமை விட்டு விலகத் துவங்கினார். அவர் தான் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்க வேண்டும் என்றார்.

    சைய்யாம் தான் எழுதி வைத்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கடைசியாக தனது காதலருக்கு தான் போன் செய்துள்ளார்.

    English summary
    Budding actress Saiyyam Khanna committed suicide in Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X