தமிழ்நாட்டுக்கு தேவை? விழா மேடையில் அரசியல் பேசிய விஜய்.. முழு பேச்சு விவரம் இதோ!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை தொடங்கியது. இன்றைய விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இதில் விஜய்யின் முழு பேச்சை பார்க்கலாம்.

நடந்து முடிந்த 10வது மற்றும் 12வது தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி, தங்கைகளுக்கும், பெருமையோடு வந்து இருக்கும் அவர்களின் பெற்றோர்களும், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா,நண்பிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒருமுறை இளம் மாணவ,மாணவிகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Vijay

விஜய் பேச்சு: பாசிட்டிவ் எனர்ஜி இருப்பவர்களை பார்க்கும் போது, இயல்பாகவே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி,கெமிஸ்ட்ரி இன்று காலையில் இருந்து இருக்கிறது. எல்லாத்துறையும் நல்லத்துறைதான் அதில் முழு மனதோடு, கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்தான். இதனால், உங்களுக்கு பிடிச்சத்துறை தேர்ந்து எடுங்கள். தமிழகத்தில் நல்ல மருத்துவர்கள், இன்ஜினியர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், தற்போது தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

நல்லத் தலைவர்கள்: நான் தலைவர்கள் என்று சொன்னதும் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

ஆராய கற்றுக்கொள்ளுங்கள்: செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உறுதிமொழி: மேலும் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள், தவறான பழக்க வழங்கங்களில் ஈடுபடும் நண்பர்களை நல்வழிப்படுத்துங்கள். நீங்களும் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள், சமீபத்தில் பார்த்தால் தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பெற்றோராக, ஒரு அரசியல் கட்சி தலைவராக எனக்கே இந்த விஷயத்தில் பயமாக இருக்கிறது. சில நேரங்களில் அரசே எல்லாவற்றையும் பார்க்கும் என நினைக்காமல் நீங்கள் உங்களை நல்வழியில் வைத்திருக்க முயலுங்கள் Say no to temporary pressures. Say no to Drugs என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று விஜய் மாணவர்களிடம் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X