Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல்.. மர்மகும்பல் கைவரிசையால் பதற்றம்!

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி கடந்த சில தினங்களிலேயே 1500 கோடிகளுக்கும் மேல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தின் பிரீமியர் ஷோ கடந்த 4ம் தேதி ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் நடந்த நிலையில் அங்கு அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். கூட்ட நெரிசலில் ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

allu arjun pushpa 2 movie

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது புஷ்பா 2 படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறப்பாகவே பூர்த்தி செய்தது. படம் கடந்த சில தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து வருகிறது. தொடர்ந்து படம் திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் படம் ஓடிடியிலும் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ரிலீசுக்கு முந்தைய நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

ரசிகை உயிரிழந்த சம்பவம்: கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தில் இந்த படத்தில் பிரிமியர் ஷோ சந்தியா திரையரங்கில் நடந்த நிலையில் அங்கு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா வந்ததையடுத்து அவர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. அல்லு அர்ஜுன் கள நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் சம்பவ இடத்திற்கு சென்றது மிகப்பெரிய தவறு என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் கைது: இந்நிலையில் இந்த சம்பவத்தில் சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதல்வர் சட்டப்பேரவையில் காட்டம் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் சிறைக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு சக நடிகர்கள் மிகப் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் ஒன்றன்பின் ஒருவராக அவரது வீட்டில் சென்று பார்த்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கானாவின் ஏசிபி, டிஜிபி உள்ளிட்டவர்கள் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர்.

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறி சம்பவம்: நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன் இந்த விவகாரத்தில் தன்னை சிலர் குற்றம் சாட்டி வருவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஓஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சுற்றுசுவர் மீது ஏறி அங்கிருந்த பூந்தொட்டிகளையும் அவர்கள் உடைத்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X