Vijay: மனங்களை ஆளும் விஜய் அண்ணா.. மாநிலத்தையும் ஆள வரவேண்டும்.. மாணவி கவிதைக்கு அதிர்ந்த அரங்கம்!
சென்னை: நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை நேற்று சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். சுமார் 2 கோடி செலவில் 234 தொகுதியையும் கவர் செய்யும் விதமாக மாணவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய்யுடன் மாணவர்கள் கொஞ்சி விளையாடிய காட்சிகளும், கட்டியணைத்து அழுத காட்சிகளும் நேற்று முதல் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அதில், சிலர், வெளிப்படையாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரத்தான் இப்படியொரு விழாவையே நடத்துகிறார் என்கிற எண்ணத்திலேயே பேசியதும் தீயாக பரவி வருகிறது.

மாஸ்டர் பிளான்: முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து விட்டாலே அவர்களை வைத்து அவர்களின் பெற்றோர்களையும் எளிதில் கவர்ந்து விட முடியும் என்கிற மாஸ்டர் பிளான் உடனே நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தியதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரத்தான் இதை செய்கிறார் என்றாலும், நல்லது தானே செய்கிறார். அதில், என்ன தப்பு இருக்கு என அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்துள்ளன.
மாணவர்களை சந்தித்த விஜய்: ரசிகர்களை கூட இந்த அளவுக்கு நெருக்கமாக நடிகர் விஜய் சந்தித்து கிடையாது என ரசிகர்களே புலம்பும் அளவுக்கு படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை நேற்று நடிகர் விஜய் சந்தித்து அவர்களுக்கு சால்வை போர்த்தி, விருது கொடுத்து பரிசுத் தொகையும் வழங்கி உள்ளார்.
மேடையில் தேவையில்லாத கூட்டத்தை சேர்க்காமல், அனைத்தையுமே தானே செய்துக் கொள்கிறேன் என தனியாளாக நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் நடு நாயகமாக செயல்பட்டதும் பல மணி நேரம் சேர் கூட போட்டுக் கொண்டு உட்காராமல் தொகுப்பாளர்கள் போல கால் கடுக்க நின்றபடி நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார்.
கவிதை சொன்ன மாணவி: நடிகர் விஜய்யிடம் பரிசு வாங்க வந்த மாணவர்கள் கவிதை சொல்வது, ஓவியத்தை பரிசாக வழங்குவது, கன்னத்தை கிள்ளுவது, கட்டிப் பிடிப்பது என பல சேட்டைகளையும் செய்தனர்.
அதில், ஒரு மாணவி பரிசு வாங்கியதும் மைக்கை வாங்கி பேசினார். விஜய் அண்ணா 11 மணிக்கு வந்து அனைவருக்கும் சால்வை போர்த்தி பரிசு வழங்கி வருகிறார். அந்த எனர்ஜி கொஞ்சம் கூட குறையவில்லை. அவருக்காக ஒரு ரெண்டு வரி கவிதை சொல்றேன் என மைக்கை வாங்கி பேசினார்.
மாநிலத்தை ஆள வரவேண்டும்: "கை சலிக்கா அனைவருக்கும் சால்வை போர்த்தி.. வயிறார அனைவருக்கும் அன்னமும் தந்து.. மனம் குளிர கல்வி விருதும் தந்த.. எங்கள் மனங்களை எல்லாம் ஆளும் விஜய் அண்ணா.. நாளை மாநிலத்தை ஆள நீ வரவேண்டும்" என கவிதை வாசித்ததுமே ஒட்டுமொத்த அரங்கமே அதிர மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சத்தம் விண்ணை பிளந்தது.
இது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கூட்டமா அல்லது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் கூட்டமா? என்கிற சந்தேகமே பலருக்கும் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் அனைத்து சிறுவர்களின் உள்ளத்தையும் விஜய் கவர்ந்துள்ளார் என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ண மாணவர்கள்: நடிகர் விஜய் எதற்காக இப்படியொரு விருது விழாவை இத்தனை ஆண்டுகள் கழித்து நடத்துகிறார் என்றும் அவரது மைண்ட் வாய்ஸ் என்ன என்பதையும் மாணவர்களே கேட்ச் பண்ணி விட்டனர் என ட்ரோல்களும் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











