twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு

    |

    சென்னை: நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அரசியலில் மாற்றத்தை நிகழ்த்த மாணவர்களால் நிச்சயம் முடியும். குப்பையும் சாக்கடையுமாய் இருக்கும் அரசியலை சுத்தம் செய்து நெறி தவறாமல் சமுதாயத்திற்கு நல்லது செய்ய மாணவர்களுக்கு அழைப்பு விடுகிறேன் என்றார்.

    மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் குடியிருக்கும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 88ஆவது பிறந்த நாளான நேற்று சமூகத்திற்கு நன்மை விளைவிக்கும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.

    Students can change in politics-Kamal Haasan

    கலாமிற்காக கமல் என்ற தலைப்பில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் கனவுகளை நிறைவேற்றுவதில் மாணவர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து பேசினார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், மக்கள் நீதி மையம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் திரு. சிநேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் தனது பல்வேறு கருத்துகள் குறித்து மாணவர்களிடம் பேசினார். முக்கியமாக அவர் மாணவர்களை அரசியலுக்கு வரவேற்றார். மாணவர்களின் சேவை அரசியலுக்கும் நம் சமுதாய வளர்ச்சிக்கும் நிச்சயம் தேவை. ஆகையால் மாணவர்கள் எந்த தயக்கமுமின்றி அரசியலுக்கு வரவேண்டும். உங்களை வரவேற்கும் முதல் குடிமகனாக நான் இருப்பேன் என்றார்.

    அப்துல் கலாம் ஐயாவிற்காக சமாதி எழுப்புவதற்காக நாங்கள் இங்கே வரவில்லை. அவர் சமுதாயத்தின் மீது கொண்டிருந்த கனவுகளை உங்களுக்குள் விதைப்பதற்காகவே முயற்சி செய்கிறோம். யார் எதை கூறினாலும் அப்படியே கண்மூடித் தனமாக அதை ஏற்று கொள்ளாமல் உங்களுடைய பகுத்தறிவு மூலம் அதை முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.

    இன்றைய மாணவர்கள் தான் நாளைய இந்தியா. அப்படி இருக்கையில், இன்னும் எத்தனை நாள் தான் நீங்கள் மாணவர்களாகவே இருப்பீர்கள். ஏன் அரசியலுக்கு இதுவரையில் எந்த மாணவரும் வரவில்லை. அரசியலில் மாற்றத்தை நிகழ்த்த மாணவர்களால் நிச்சயம் முடியும். குப்பையும் சாக்கடையுமாய் இருக்கும் அரசியலை சுத்தம் செய்து நெறி தவறாமல் சமூகத்திற்காக நலம் பயக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுகிறேன் என்றார்.

    மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது, நீங்கள் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று மாணவர்கள் கேட்ட கேள்விக்கு, கமல்ஹாசன் நான் நேர்மையாக இருப்பேன். நான் மட்டும் அல்ல அந்த பதவிக்கு யார் வந்தாலும் நேர்மையாகத் தான் இருக்க வேண்டும் என்றார். விவசாயத்தின் நிலை குறித்து கேட்டதற்கு, இளைஞர்கள் எங்கோ இருந்து கொண்டு விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபம் மட்டும் படாமல் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு நேரடியாக களத்தில் இறங்கி விவசாயம் அழிந்து விடாமல் அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அவரின் ஊக்குவிக்கும் பேச்சினால் மாணவர்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் அப்துல் கலாமின் கனவை நனவாக்க மாணவர்களின் பலம் மிக மிக முக்கியம். அதற்கு அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே ஆகும்.

    English summary
    Actor and Makkal Needhi Maiam Party leader Kamal Haasan held discussions with students at the University of Wales, students can be sure of the change in politics. I call on students to clean up the rubbish and wasteful politics and do good to society.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X